முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

753

356

திருவாய்மொழி - ஏழாம் பத்து

                     753 

        ஆமுதல் வன்இவன் என்றுதன் தேற்றிஎன்
        நாமுதல் வத்து புகுந்துநல் இன்கவி
        தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்னஎன்
        வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ!

   
பொ-ரை : ‘கவி பாடுகைக்கு முதல்வன் ஆவான் இவன் என்று தன்னை நான் தெளியும்படி செய்து, முதலிலே என் நாவிலே வந்து புகுந்து நல்ல இனிய கவிகளை. முதன்மை பெற்ற பரிசுத்தரான அடியார்கட்குத் தானே தன்னைச் சொன்ன என் வாக்கிற்குக் காரணனான அப்பனை இனி ஒருநாளும் மறக்க உபாயம் இல்லை,’ என்றபடி.

    வி - கு :
‘இவன் ஆம் முதல்வன் என்று தன் தேற்றி, வந்து புகுந்து, இன் கவி பத்தர்க்குச் சொன்ன வாய் முதல் அப்பன்? என்க.

    ஈடு :
மூன்றாம் பாட்டு. 1‘கைம்மாறு செய்யாதொழியவுமாம் கண்டீர், நான் மறந்து பிழைக்கப் பெற்றானாகில்!’ என்கிறார்.

    ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி-‘முதல்வன் ஆம் இவன்,’ என்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு உண்டாம் படியாகச் செய்து: என்றது, ‘காரண வாக்கியங்களில் உபாசிக்கத் தக்கவனாகச் சொல்லப்படுகிறான் தானே என்று தன் பக்கலிலே நான் தெளியச்செய்து,’ என்றபடி. அன்றிக்கே, ‘பரமபதத்தைப் போன்று, சம்சாரத்தையும் திருத்த நினைத்தோம். அதற்கு அடி ஆம் இவன், என்று என்பக்கலிலே தன் சொரூபம் முதலானவைகளைத் தெளியச் செய்து என்னுதல். 2இங்கே அருளிச்செய்யும் வார்த்தை: ‘திருப்புற்றுக்குக் கிழக்கே கரியமாணிக்காழ்வார் திருமுன்பின் படிக் கட்டிலிலே ஆளவந்தார் எழுந்தருளியிருக்க, உடையவர்

__________________________________________________

1. ‘வாய்முதல் அப்பனை என்று மறப்பான்’ என்றதனைக் கடாட்சித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘தன் தேற்றி’ என்பதற்கு, ‘தன் சொரூபம்
  முதலானவைகளை என் பக்கலிலே தெளியச்செய்து’ என்பது இரண்டாவது
  பொருள். அதாவது, ‘உலகத்தைத் திருத்தத் தக்க ஞானம் உண்டாகும்படி
  மயர்வற மதிநலம் அருளினன்,’ என்றபடி.

2. பிராசிங்கிகமாக ஜகிஹ்யம் அருளிச்செய்கிறார், ‘இங்கே’ என்று தொடங்கி.
  ‘இங்கே’ என்றது, ‘உலகைத் திருத்துகைக்கு இவன் அடி ஆம் என்று
  சொன்ன இவ்விடத்தில்’ என்றபடி.