முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

358

திருவாய்மொழி - ஏழாம் பத்து

என்னுதல். என்று மறப்பேனோ - 1‘முன்பு அநாதி காலம் மறந்து போந்ததாகில் இனிமேல் நினைக்கைக்குக் காரணமான காலத்தை எல்லாம் மறக்கைக்கு உடலாக்கினால்தான் மறப்பனோ?’ என்றது, ‘முன்பு நினைக்கையில் உள்ள அருமையோபாதியும் போரும் இனி மறக்கையில் உள்ள அருகையும்: இனி ஏதேனும் ஒரு நாள் தான் என்னாலே மறக்கப்போமோ?’ என்றபடி.

(3)

                      754

        அப்பனை என்று மறப்பன்என் ஆகியே
        தப்புதல் இன்றித் தனைக்கவி தான்சொல்லி
        ஒப்பிலாத் தீவினை யேனை உயக்கொண்டு
        செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.


    பொ-ரை : ‘என்னைக் கருவியாகக்கொண்டு தவறுதல் இல்லாமல் தன்னையே தான் கவி சொல்லி, ஒப்பு இல்லாத தீய வினைகளையுடையேனான நான் உய்யும்படி அங்கீகரித்து. செவ்வையான காரியங்களையே செய்து போகின்ற சீலத்தைக் கண்டு வைத்தும், என் அப்பனை மறக்கப்போமோ?’ என்றபடி.

    வி-கு :
‘தீவினையேனை உய்யக் கொண்டு என்னாகித் தனைக் கவிதான் சொல்லிச் செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டும் அப்பனை மறக்கப்போமோ?’ என்றபடி.

    ஈடு :
நான்காம் பாட்டு. 2‘தானே தன்னைக் கவிபாடிக் கொண்டனாகில், ஓர் ஆச்சரியம் இல்லை; அதற்குத் தகுதி இன்றிக்கே இருக்கிற என்னைக்கொண்டு தப்பாமே கவிபாடின இந்த உபகாரத்தை இனி மறக்க உபாயம் இல்லை,’ என்கிறார்.

    அப்பனை என்று மறப்பான்-உபகாரன் ஆனவனை நான் என்று மறப்பன்? 3இனி, அவன் அபகாரம் செய்தால் தான் மறக்கப்போமோ? நீர் மறக்க ஒண்ணாதபடி அவன் செய்த உபகாரம் யாது?’

_______________________________________________________________

1. ‘என்று மறப்பனோ’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘முன்பு’ என்று
  தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார், ‘முன்பு நினைக்கையில்’ என்று
  தொடங்கி. அருமையோபாதி-அருமையைப்போல.

2. திருப்பாசுரம் முழுதினையும் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

3. மறக்கப் போகாமையின் உறைப்பை அருளிச்செய்கிறார், ‘இனி., அவன்’
  என்று தொடங்கி.