முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

36

திருவாய்மொழி - ஏழாம் பத்து

வேண்டி இருக்க, ‘அட்டது ஒழியச் சுட்டது கொண்டு வா,’ என்று உன்னை நிர்ப்பந்திக்கும்படியான பாவத்தைச் செய்துள்ளேன் என்னுதலுமாம்.

(7)

              670

        இன்ன முதெனத் தோன்றிஓர் ஐவர்
            யாவரையும் மயக்கநீ வைத்த
        முன்னம் மாயமெல்லாம் முழுவேர்
            அரிந்துஎன்னையுன்
        சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக்
            கைதொழ வேஅருள் எனக்கு
        என்னம்மா! என்கண்ணா!
            இமையோர்தம் குலமுதலே!


    பொா-ரை;
என் அம்மா! என் கண்ணா! நித்தியசூரிகள் கூட்டத்துக்கு முதல்வா! ஒப்பற்ற ஐவராலே இனிய அமுதத்தைப் போன்று தோன்ற, அதனாலே யாவரையும் மயக்க நீ வைத்த அநாதியான எல்லா மாயத்தையும் அடியோடு வேரை அரிந்து, நான் உன்னடைய சின்னங்களையும் அழகிய மூர்த்தியையும் சிந்தித்து ஏத்திக் கையால் தொழும்படியாகவே எனக்குத் திருவருள் செய்யவேண்டும்.

    வி-கு:
‘தோன்றி மயக்க நீ வைத்த மாயம்’ என்க. தோன்றி-தோன்ற. ‘அரிந்து சிந்தித்து ஏத்திக் கைதொழ எனக்கு அருள்’ என்க. இனி, அரிந்து-அரிய என்னலுமாம். ‘சிந்தித்து ஏத்திக் கைதொழ’ என்ற இடத்தில் முக்கரணங்களில் செயல் கூறப்பட்டது.

    ஈடு: எட்டாம் பாட்டு. 1‘எனது பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து, நான் மனம் வாக்குக் காயம் இவற்றாலே உன்னை எப்பொழுதும் அனுபவிக்கும்படி செய்தருற வேணும்’ என்கிறார்.

    இன் அமுது எனத்தோன்றி-2முடிவில் பலிக்குமது முகப்பிலேயாகப் பெற்றேனாகில் கைவிடலாங்காண். 3‘பொறிகள், புலன்க

_____________________________________________________________

1. ‘மாயம் எல்லாம் முழுவேர் அரிந்து சிந்தித்து ஏத்திக் கைதொழவே
  அருள்’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘இன் அமுதாய்’ என்னாமல், ‘அமுதே எனத் தோன்றி’ என்கையாலே,
  முதலில் அமுதமாய், முடிவில் விடமாம் என்பது சித்திக்கையாலே,
  அங்ஙனம் போதரும் பொருளைச் சொல்லி வேறுபடுகின்ற ஆழ்வாருடைய
  மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘முடிவில்’ என்று தொடங்கி.

3. முதலில் இன்னமுது எனத்தோன்றுவதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
  ‘பொறிகள்’ என்று தொடங்கி.

        ‘விஷயேந்திரிய ஸம்யோகாத் யத்தத் அக்ரே அம்ருதோபமம்
         பரிணாமே விஷமிவ தத்ஸூகம் ராஜஸம் ஸ்ம்ருதம்’

என்பது, ஸ்ரீகீதை, 18:38.