முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

755

360

திருவாய்மொழி - ஏழாம் பத்து

                      755 

        சீர்கண்டு கொண்டு திருந்துநல் இன்கவி
        நேர்பட யான்சொல்லும் நீர்மை இலாமையில்
        ஏர்வுஇலா என்னைத்தன் ஆக்கிஎன் னால்தன்னைப்
        பார்பரவு இன்கவி பாடும் பரமரே.

   
பொ - ரை : ‘தன்னுடைய கல்யாண குணங்களைக் கண்டு கொண்டு. திருந்திய நல்ல இனிய கவிகளைத் தகுதியாக யான் சொல்லும் ஞானம். எனக்கு இல்லாமையினால், தகுதி இல்லாத என்னைத் தன் பக்கலிலே பத்தியுடையேனாம்படி செய்து. என்னால் தன்னைப் பூவுலகமெல்லாம் துதிக்கத் தக்க கவிகளைப் பாடுகின்ற பரமன் ஆவான்,’ என்கிறார்.

    வி - கு :
‘சீர்கண்டு கொண்டு சொல்லும் நீர்மை இலாமையின்’ என்க. ‘ஆக்கி என்னால் தன்னைப் பாடும் பரமர்’ என்க.

    ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1‘தன்னைக் கவி பாடுகைக்குத் தகுதியான நீர்மையும் இன்றிக்கே இச்சையும் இன்றிக்கே இருக்கச் செய்தே. உலகம் எல்லாம் கொண்டாடும்படியான கவியை என்னைக் கொண்டு பாடுவதே! என்ன சர்வேஸ்வரனோ!’ என்கிறார்.

    சீர் கண்டுகொண்டு - கல்யாண குணங்களை நன்கு அறிந்து, திருந்து நல் இன்கவி- 2கட்டளைப்பாட்டு எல்லா இலக்கணங்களும் நிறைந்தனவாய் இனியனவான கவிகளை. நேர்பட யான் சொல்லும் 3நீர்மை இலாமையில் - இவை ஒன்றும் இல்லையாகிலும், சொல்லுகிறவனுடைய நன்மையாலே வருவது ஒரு நன்மையும் உண்டே அன்றோ கவிக்கு? அப்படி வாய்க்கச் சொல்லும் சுபாவத்தை நான் உடையேன் அல்லாமையில். ஏர்வு இலா என்னை-அழகு இல்லாத என்னை. 4‘ஏர் - அழகு. தன் ஆக்கி - தன்னோடு ஒக்கச்செய்து. அன்றிக்கே, ‘தனக்கு ஆக்கி’ என்னுதல். என்னால் தன்னைப் பார் பரவு இன் கவி பாடும் - என்னைக் கருவியாகக் கொண்டு பாரில்

__________________________________________________

1. ‘நீர்மை இலாமையில் ஏர்வு இலா என்னைப் பார் பரவு இன்கவி பாடும்
  பரமரே’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. கட்டளைப்பட்டு-திருந்தப்பட்டு.

3. ‘நீர்மை’ என்பது, ஞானம் சத்தி முதலானவைகளைச் சொல்லுகிறது.

4. ‘ஏர்’ என்பது, அழகாய், இச்சையைச் சொல்லுகிறது.