முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

364

திருவாய்மொழி - ஏழாம் பத்து

பதைப்போன்று,  அழியாத வேதம் போலே நித்தியமாய் இருக்கிற ஆயிரம் பாசுரங்களைப் பாடுவிக்க வேணும்’ என்று பார்த்தான். அன்றிக்கே, ‘பரமபதத்தை இருப்பிடமாகவுடையனாகையாலே வந்த ஏற்றத்தைப் போன்றதாக நினைத்திராநின்றான் ஆயிற்று, இக்கவிபாட்டுடையான் ஆகையால் வந்த ஏற்றத்தையும் என்னுதலுமாம். 

(6)

                       757

        வைகுந்த நாதன்என் வல்வினை மாய்ந்துஅறச்
        செய்குந்தன் தன்னைஎன் னாக்கிஎன் னால்தன்னை
        வைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி
        செய்குந்தன் தன்னைஎந் நாள்சிந்தித்து ஆர்வனோ?

   
பொ-ரை : ஸ்ரீ வைகுண்டத்திலே எழுந்தருளியிருப்பவனும், என்னுடைய வலிய கொடிய வினைகள் எல்லாம் அழிந்து அற்றுப் போகும்படியாகச் செய்கின்ற தூயோனும், என்னைத் தனக்கு உரியவனாக்கி என்னால் தன்னை வைகுந்தநாதனாகப் புகழ் வளவிய இனிய கவிகளைச் செய்யும் குந்தன் என்னும் திருநாமத்தையுடையவனுமான எம்பெருமானை எத்தனை நாள் சிந்தித்தாலும் மனம் நிறைவு உண்டாகுமோ?

    வி-கு :
குந்தன் - முகுந்தன் என்ற திருநாமத்தின் சிதைவுமாம்; அன்றிக்கே, ‘குந்தம் என்னும் ஆயுதத்தையுடையவன்’ என்னவுமாம். ‘தன்னை என்னாக்கி’ என்ற இடத்தில் ‘என்னைத் தன்னாக்கி’ என்று பிரித்துக் கூட்டுக. ‘புகழச் செய் குந்தன்’ என்க.

    ஈடு :
ஏழாம் பாட்டு. 1பரம உதாரமாய் எல்லை அற்ற இனியனவான கவிகளை என்னைக் கொண்டு பாடுவித்துக்கொண்டே மஹோபகாரத்துக்கு, காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் இவனை அனுபவித்தாலும் நிறைவு பெற்றவன் ஆகின்றிலேன்,’ என்கிறார்.

    வைகுந்தநாதன் - 2உதவி செய்தவன் என்னோடு அணைய நின்றான் ஒருவனாய் நான் ஆறி இருக்கிறேனோ? அயர்வு அறும்

__________________________________________________

1. ‘என்னால் தன்னை வண் தீம் கவி செய் குந்தன் தன்னை எந்நாள்
  சிந்தித்து ஆர்வனோ?’ என்பனவற்றைக் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ‘வைகுந்தநாதன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘உதவி செய்தவன்’
  என்று
தொடங்கி