முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

366

திருவாய்மொழி - ஏழாம் பத்து

தாம் ஒருவர் உளராகக் கண்டிலர் அன்றோ? 1‘அவன் இல்லாதவன் ஆகவே ஆகிறான்’ என்னும் நிலையன்றோ முன்? சர்வசத்தியான தன்னாலேதான் இது செய்யலாமோ என்பார், ‘வல்வினை’ என்கிறார்.

    மாய்ந்து அறச் செய்குந்தன் - 2என்னுடைய பிரபல விரோதியைப் போக்கின சுத்தியையுடையவன்; ‘அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா’ என்னக்கடவது அன்றோ? 3அடியார்கள் பக்கல் அன்பு வைத்து அவர்கள் செய்த பாபங்களை அடியர் அல்லாதார் பக்கல் அசல் பிளந்தேறிடும்படியான் சுத்தி யோகத்தை அன்றோ அவ்விடத்திற்சொல்லுகிறது? அன்றிக்கே, ‘முகுந்தன்’ என்ற பெயர் ‘குந்தன்’ என்று முதற்குறையாய்க் கிடக்கிறது என்னவுமாம். அன்றிக்கே, ‘குந்தன்’ என்று திருநாமம் ஆகவுமாம்; 4‘குமுத: குந்தர: குந்த:’ என்று குந்தன் என்றே திருநாமம் ஆயிற்று அன்றோ? தன்னை என் ஆக்கி - என்னைத் தன்னோடு ஒக்கச் செய்து. அன்றிக்கே, ‘தனக்கு ஆம்படி செய்து’ என்னுதல். என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ - தந்தையானவன் மகனுக்கு ஒரு பசுவை நீர் வார்த்துக் கொடுத்து மீண்டு அவன் பக்கலிலே பசுவை நீர் ஏற்றுப் பெறுமாறு போலே இருப்பது ஒன்றாயிற்று இதுவும். 6அது நித்திய விபூதி அன்றோ? இங்ஙனே இருக்கச் செய்தேயும் இவர் புகழ்ந்த இதனாலே தனக்கு அவ்விபூதி உண்டாயிற்றதாக நினைத்து இராநின்றான் ஆதலின், ‘வைகுந்தனாகப் புகழ்’ என்கிறது.

___________________________________________________________________________

1. ‘தாம் உளரே அன்றோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவன்’ என்று
  தொடங்கி. அஸந்நேவஸபவதி’ என்பது தைத்திரீயம்.

2. ‘குந்தம்’ என்பது, குருந்தமாய், அதன் பூவெளுத்திருக்குமாகையாலே, அதனால்
  தூய்மையைச் சொல்லுகிறது என்று திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார், ‘என்னுடைய’
  என்று தொடங்கி. அதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘அடியார்க்கு’ என்று தொடங்கி.
  இது, திருவாய். 2. 6 : 1.

3. இத்திருப்பாசுரப் பகுதிக்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘அடியார்கள் பக்கல்’ என்று
  தொடங்கி. அசல் பிளந்தேறிடும்படியான வேறு ஒருவர் சரீரத்திலே பிரவேசிப்பித்து
  அனுபவிப்பிக்கும்படியான.

4. ‘குமுத: குந்தர: குந்த,’ என்றது, ஸஹஸ்ரநாமம்.

5. ‘என்னாக்கி என்னால் தன்னைப் புகழ என்பதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்,
  ‘தந்தையானவன்’ என்று தொடங்கி.

6. ‘நித்தியமான விபூதி இவர் புகழ்ந்த பின் உண்டாயிற்று என்னக்கூடுமோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘அது நித்திய விபூதியன்றோ?’ என்று தொடங்கி. இதற்குத்
  திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘ஆத்துமவஸ்து’ என்று தொடங்கி.