அள
ஒன்பதாந்திருவாய்மொழி
-
பா. 8 |
369 |
அளவு அல்லவாயிற்று,
பிற்பாட்டிற்கு அவன் நாணம் உறும்படி. எந்நாள் சிந்தித்து ஆர்வனோ - செய்த உபகாரம் கனத்து
இராநின்றது; உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை’ நான் என் செய்வேன்?
1சரீரம் பிரிந்த பின்பு வாய்புகு நீர் ஆகையாலே சொல்லுகைக்குக் காலம் இல்லை; இங்கு
இருக்கும் நாள் காலம் போருகிறது இல்லை; செய்த உபகாரமோ, கனத்து இராநின்றது. நான் என் செய்கேன்?
(7)
758
ஆர்வனோ ஆழிஅங்
கைஎம்பி ரான்புகழ்
பார்விண் நீர்முற்றும்
கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத்தன்
ஆக்கிஎன் னால்தன்னைச்
சீர்பெற இன்கவி
சொன்ன திறந்துக்கே?
பொ - ரை :
‘தகுதி இல்லாத என்னைத் தனக்கு உரியவனாக்கி என்னால் தன்னைச் சிறப்புப்பெற இனிய கவிகளைச்
சொன்ன பிரகாரத்திற்கு, சக்கரத்தைத் தரித்த எம்பிரானுடைய கல்யாண குணங்களை, பூமியிலுள்ளார்
ஆகாயத்திலுள்ளார் தண்ணீரிலுள்ளார் ஆகிய எல்லாரோடும் கலந்து அனுபவித்தாலும் நிறைவு பெற்றவன்
ஆவேனோ?’ என்கிறார்.
வி - கு :
‘சொன்ன திறத்துக்கு, எம்பிரான் புகழைக் கலந்து பருகிலும் ஆர்வனோ?’ என்க.
ஈடு : எட்டாம்
பாட்டு. 2‘நான் ஒருவனும் இருந்து ஜீவிக்கும் நாள் உபகாரத்தை நினைப்பதற்குக் காலம்
போராது என்று நோவுபடுகிறேனோ? என்னுடைய செய்ந்நன்றியறிதலையும் விருப்பத்தயுமுடையராய்க்கொண்டு
புறம்பே வேறு விஷயங்களிலே நோக்குள்ளவர்களாகவும் பகவத் விஷயத்திலே நோக்கு இல்லாதவர்களாகவும்
இருக்கிற எல்லா ஆத்துமாக்களும் என்னுடனே கூடி நெடுங்காலமெல்லாம் நானும் அவர்களும் கூடி நின்று
அனுபவித்தால்தான் நிறைவு பெற்றவன் ஆவேனோ?’ என்கிறார்.
__________________________________________________
1. ‘‘எந்நாள்’ என்பது என்?’
காலம் இல்லையோ?’ என்ன, ‘சரீரம்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
2. ‘பார்
விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்’ என்றதற்குப் ‘பாரிலுள்ளார்
விண்ணிலுள்ளார் நீரிலுள்ளார்
இவர்கள் எல்லாரும் கூடி நின்று அவன்
குணங்களை அனுபவித்தாலும் திருத்தி பிறவாது’ என்று பொருள்
அருளிச்
செய்யத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|