759
372 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
759
திறத்துக்கே
1துப்பர வாம்திரு மாலின்சீர்
இறப்பெதிர் காலம்
பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத்தன்
ஆக்கிஎன் னால்தன்னை
உறப்பல இன்கவி
சொன்ன உதவிக்கே?
பொ - ரை :
‘மறப்பு இல்லாதவனான என்னைத் தனக்கு உரியவனாக்கி என்னால் தன்னைப் பொருந்தும்படி பல
கவிகளைக் கூறிய உபகாரத்துக்கு எல்லா வகையாலும் வலியோனான திருமாலினுடைய கல்யாணகுணங்களை மூன்று
காலங்களிலும் அனுபவித்தாலும் நிறைவு பெற்றவன் ஆகேன்,’ என்றவாறு.
வி - கு :
‘தன்னை உறச் சொன்ன உதவிக்கு’ என்க.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 3‘என்னைக்கொண்டு கவி பாடுவித்துக்கொண்ட மஹோபகாரகனை, எல்லாச்
சேதனர்களுடைய அனுபவ சத்திகளையுடையேனாய்க்கொண்டு காலம் எல்லாம் அனுபவித்தாலும் ஆரேன்,’ என்கிறார்
இதில்.
திறத்துக்கே துப்பரவாம்
திருமாலின் சீர் - ஏதேனும் ஓர் காரியத்தில் வந்தால், 3ஒரு துரும்பைக் கொண்டு
காரியம் கொள்ளப் பார்த்தால் அதனைக்கொண்டே காரியத்தை அப்படித் தலைக்கட்டிக் கொள்ளுதற்குத்
தகுதியான ஆற்றலையுடையனான. ‘அதற்கு அடி என்?’ என்னில், திருமகள் கேள்வன் ஆகையாலே, 4நினைத்த
காரியம் செய்து தலைக்கட்டுகைக்குத் தகுதியான ஆற்றலையுடையனான திருமகள் கேள்வனுடைய கல்யாண குணங்களை.
5ஒருவன் செய்தது வாய்த்து வரப் புக்கவாறே ‘அவன் குப்பைக்
_______________________________________________________________
1. ‘துப்புரவாம்’ என்பதும்
பாடம்.
2. திருப்பாசுரம் முழுதினையும்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. ‘நாகம் ஒன்றிய நல்வரை
யின்தலை மேனாள்
ஆகம் வந்தெனை அள்ளுகிர்
வாளின் அளைந்த
காக மொன்றை முனிந்தயல்
கல்எழு புல்லால்
வேக வெம்படை விட்டதும்
மெல்ல விரிப்பாய்.’
என்ற கம்பராமாயணச் செய்யுளை இங்கு
நினைவு கூர்க.
4. பதப்பொருள் அருளிச்செய்கிறார்,
‘நினைத்த காரியம்’ என்று தொடங்கி.
5.
‘திருமகள் கேள்வன் ஆனால் துப்புரவு உண்டாமோ?’ என்ன, ‘ஒருவன்’
என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். குப்பைக் காலன்
-நல்வழிக் காலன்.
|