முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இல

378

திருவாய்மொழி - ஏழாம் பத்து

இல்லையாகிலும், ஞானக்குறைவு அற்று முத்தனானால், பிரதியுபகாரம் செய்யத் தட்டு என்?’ என்னில், இங்கும் அங்கே - 1‘இங்கு ஆனால், தேக ஆத்துமா அபிமானத்தாலே ‘நான், என்னது’ என்று போய்க் கால் கட்டித் திரிகையாலே, செய்யலாவது உண்டோ?’ என்று பிரமிக்கவுமாய் இருக்கும்; அதுவும் இன்றிக்கே, ஞானக்குறைவு கழிந்த அளவிலே, தான் செய்யலாவது ஒன்று இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டா அன்றோ? 2‘தனது இயல்பான வடிவைப் பெறுகிறான்’ என்கிறபடியே, சொரூப ஞானம் பிறந்த இடத்தில் சொரூபத்திற்கு விரோதியாகச் சொல்லப் போகாதேயன்றோ?

(10)

                     761

        இங்கும்அங் கும்திரு மால்அன்றி இன்மைகண்டு
        அங்ஙனே வண்குரு கூர்ச்சட கோபன்
        இங்ஙனே சொன்னஓர் ஆயிரத்து இப்பத்து
        எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.

    பொ - ரை : ‘இந்த உலகத்திலும் அந்த உலகமாகிய பரமபதத்திலும் திருமாலை அல்லாமல் இல்லாத தன்மையைப் பார்த்து, அந்தத் தன்மையையுடையராய் வண்மை பொருந்திய திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபராலே இந்த வகையாலே அருளிச்செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் எந்த வகையில் சொன்னாலும் இன்பத்தைக் கொடுக்கும்,’ என்றபடி.

    வி - கு :
‘கண்டு சொன்ன ஆயிரம்’ என்க.

    ஈடு :
முடிவில், 3‘இத்திருவாய்மொழி, ஏதேனும் ஒரு படி சொல்லிலும் ஆனந்தத்தை உண்டாக்கும்,’ என்கிறார்.

_______________________________________________________________

1. மேலே எழுப்பிய சங்கைக்குப் பரிகரம் அருளிச்செய்கிறார், ‘இங்கு
  ஆனால்’ என்று தொடங்கி.

2. ‘ஞானக்குறைவு கழிந்த’ என்னும் மேல் வாக்கியத்தை விவரணம் செய்கிறார்
  ‘தனது இயல்பான்’ என்று தொடங்கி.

    ‘ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே’

என்பது, சாந்தோக். உப.

3. ‘எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்கும்’ என்றதனைக் கடாட்சித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.