முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

வந

முதல் திருவாய்மொழி - பா. 9

39

வந்து அவதரித்து என்னை நோக்கினவனே! 1அவதாரம் எல்லார்க்கும் பொதுவாக இருக்கச்செய்தே, அவர் தமக்காகச் செய்தது என்று இருப்பரே? 2மனம் வாக்குக் காயம் என்னும் இம்மூன்றும் ஒருங்கி உன் பக்கலிலே பிரவணமாம்படி ஒரு நாட்டுக்குச் செய்து கொடுத்த நீ, அதனை என் ஒருவனுக்கும் செய்யத் தட்டு என்?

(8)

                671

        குலமு தல்அடுந் தீவி னைக்கொடுவான்
            குழியினில் வீழ்க்கு மைவரை
        வலமுதல் கெடுக்கும் வரமே
             தந்தருள் கண்டாய்
        நிலமு தல்இனி எவ்வுல குக்கும்
             நிற்பன செல்வன எனப்பொருள்
        பலமுதல் படைத்தாய்! என்
             கண்ணா! என் பரஞ்சுடரே!

    பொ-ரை: பூமி முதலாக மற்றும் எல்லா உலகங்கட்கும் தாவரம் ஜங்கமம் என்று சொல்லப்படுகின்ற பல பொருள்களையும் ஆதியில் படைத்தவனே! என் கண்ணனே! என் பரஞ்சுடரே! குலத்தை அடியோடு கெடுக்கின்ற தீவினைகளாகிய கொடிய வலிய குழியிலே தள்ளுகின்ற ஐந்து இந்திரியங்களினுடைய வலிமையை அடியோடு அழிப்பதற்குத் தக்க சிறப்பை எனக்குக் கொடுத்தருள்வாய்.

    வி-கு :
நிற்பன - சஞ்சரிக்காத பொருள்கள்; மரம் முதலியன. செல்வன -சஞ்சரிக்கின்ற பொருள். ‘ஐவரைக் கெடுக்கும் வரம்’ என்க. வரம் - பலமுமாம்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 3‘விஷங்களிலே ஆத்துமாவைத் தள்ளும் இந்திரியங்கள் என்னை நலியாதபடி செய்யவேணும்,’ என்கிறார்.

    குலம் முதல் அடும் தீவினைக் கொடுவன் குழியினில் வீழ்க்கும் ஐவரை-ஒருவன் செய்த பாவம் அவன்றன்னளவிலே போகை அன்றிக்கே, குலமாக முதலற முடிக்கவற்றான பாவங்களை விளைக்கக் கடவனவாய், கொடியனவாய், 4அனுபவித்து முடிய ஒண்ணாதபடி

__________________________________________________________________

1. ‘அவதாரம் பொதுவாய் இருக்க, ‘என் கண்ணா’ என்கிறது என்?’ என்ன,
  ‘அவதாரம்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. ‘இமையோர் தம் குலமுதலே! சிந்தித்து எத்திக் கைதொழவே அருள் எனக்கு’
  என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார், ‘மனம் வாக்கு’ என்று தொடங்கி.

3. ‘வரமே தந்தருள் கண்டாய்’ என்னுமளவும் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

4. ‘கொடு’ என்ற சொல்லின் பொருள், ‘அனுபவித்து முடிய ஒண்ணாதபடியாய்’
  என்பது.