இள
பத்தாந்திருவாய்மொழி
-
பா. 3 |
393 |
இளமைப்பருவத்தாலே. அகல் இடம் முற்றவும் - பரப்பையுடைத்தான
பூமியும், புவர்லோகம் முதலானவைகளும் எல்லாம். ஈர் அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த - இரண்டு
அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த; என்றது, 1‘இரண்டு அடிகளாலே பூமியையும் மேல் உலகங்களையும்
அளந்தானாயிற்று, ஓர் அடிக்கு இவளைச் சிறையிட்டுவைக்க நினைத்து’ என்றதனைத் தெரிவத்தபடி. திருக்குறள்
அப்பன் - ஸ்ரீ வாமனனான மஹோபகாரகன். அமர்ந்து உறையும் - இந்திரனுக்கு இராச்சியத்தை
வாங்கிக் கொடுத்துத் திருப்பாற்கடலிலே போய்ச் சாய்கை அன்றிக்கே, அவன் வந்து நித்தியவாசம்
செய்கிற. மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை - அவன் திருவடியால் அளந்த
ஆகாசப்பரப்பு அடங்கலும் பரந்துள்ள கொடிகளையுடைத்தான மாடங்களை, ஓங்கியிருந்துள்ள மதிள்களையுமுடைத்தான
திருவாறன்விளையை. மா கந்தம் நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் - 2‘பூமியை
அடங்கலும் பனி போன்ற குளிர் நீரால் நனைக்கட்டும்’ என்று ஸ்ரீ நந்திக்கிராமம் தொடங்கி ஸ்ரீ
பரத்துவாச பகவான் ஆஸ்ரமத்தளவும் வர, பனி நீராலே விடுவித்தான் ஸ்ரீசத்துருக்நாழ்வான் என்றது
அன்றோ? அப்படியே, மா கந்த நீர் கொண்டு தூவி அநுகூலமான காரியங்களைச் செய்து கைதொழக்
கூடவற்றேயோ?
(2)
764
கூடுங்கொல்? வைகலும் கோவித் தனைமது
சூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது
அன்றி யவன்உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந்து
ஆறங்கம் பன்னினர்வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளைதொழ
வாய்க்குங்கொல் நிச்சலுமே?
பொ-ரை : நாள்தோறும் இப்படிக் கூடவற்றோ?
கோவிந்தனும் மதுசூதனனும் மிடுக்கையுடைய நரசிங்கமானவனுமான எம்பெருமானை,
_______________________________________________________________
1. ‘மூன்று அடியை இரந்து இரண்டு அடியாலே அனப்பான் என்?’
என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இரண்டு அடிகளாலே’ என்று
தொடங்கி.
2. ‘ஸிஞ்சந்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் ஹிமஸீதே நவாரிணா’
என்பது, ஸ்ரீராமா.
யுத். 130. 6.
சுலோகத்திலேயுள்ள
‘க்ருத்ஸ்நாம்’ என்றதன் பொருளை
அருளிச்செய்கிறார், ‘ஸ்ரீ நந்திக்கிராமம்’ என்று தொடங்கி.
|