765
396 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
765
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு
தும்மனத் தீங்கு நினைக்கப்பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்
நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுல
கீசன் வடமது ரைப்பிறந்த
வாய்க்கும் மணிநிறக் கண்ண
பிரான்தன் மலரடிப் போதுகளே?
பொ - ரை :
தகுதியான கரும்புகளும் பெரிய செந்நெற்பயிர்களும் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருவாறன்விளை
என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற, பொருந்திய பெரிய புகழையுடைய மூன்று உலகங்கட்கும்
தலைவனும், வடமதுரையிலே அவதரித்த, பொருந்திய நீலமணி போன்ற நிறத்தையுடைய கண்ணபிரானுமான
எம்பெருமானது தாமரை மலர் போன்ற திருவடிகளை, இங்கே இருந்து கொண்டே மனத்திலே நினைப்பதற்கு
எல்லா நேரத்திலும் நாடோறும் வாய்க்குமோ?
வி - கு : ‘மலர் அடிப் போதுகளை ஈங்கு மனத்து நினைக்கப்பெற எப்பொழுதும்
நிச்சலும் வரய்க்குங்கொல்?’ என்க.
ஈடு : நான்காம் பாட்டு. 1இதில் ‘அங்குச் சென்று அனுபவிக்க
வேண்டா, இங்கே இருந்து அங்குத்தைப் பரிமாற்றங்களை என்னுகின்ற எண்ணம் நமக்குக் கூடுவதுகாண்!’
என்கிறார்.
வாய்க்குங்கொல் நிச்சலும் - நமக்கு இப்பேறு நாள்தோறும் கூடவேணும். எப்பொழுதும்
- 2அதுதன்னிலும், நித்திய அக்நிஹோத்திரம் போலே ஒரு காலவிசேடத்திலேயாய்ப்
போக ஒண்ணாது, எல்லா நிலைகளிலும் உண்டாக வேணும். மனத்து ஈங்கு நினைக்கப் பெற - அங்குச் சென்று
அனுபவிக்க வேண்டா. இங்கே இருந்து நெஞ்சாலே அங்குத்தைப் பரிமாற்றங்களை நினைக்கப்பெற
அமையும். ‘பெற’ என்கையாலே, இந்த எண்ணத்துக்கு அவ்வருகு ஒரு பேறு இல்லை என்று இருக்கிறார் ஆயிற்று
இவர். 3‘துர்க்கதாவபி -
__________________________________________________
1. முதலடியைக்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘நிச்சலும்’ என்று கூறினவர், மீண்டும் ‘எப்பொழுதும்’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘அது தன்னிலும்’ என்று தொடங்கி.
3. ‘அப்படி எண்ணமாத்திரமே
புருஷார்த்தமாமோ?’ என்ன, அதுவே
புருஷார்த்தமாம் என்பதற்குப் பிரமாணமும் பிரமாணத்திற்குப் பொருளும்
அருளிச்செய்கிறார், ‘துர்க்கதாவபி’ என்று தொடங்கி.
|