முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

766

பத்தாந்திருவாய்மொழி - பா. 5

399

                   766 

        மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து
             எப்பொழுதும் இருத்தி வணங்கப்
        பலரடி யார்முன்பு அருளிய
             பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
        மலரின் மணிநெடு மாடங்கள்
             நீடு மதிள் திரு வாறன்விளை
        உலக மலிபுகழ் பாடநம்மேல்
             வினைஒன்றும் நில்லா கெடுமே.

    பொ - ரை : மலர்ந்த திருவடித் தாமரைகளை என்னுடைய நெஞ்சத்திலே இருத்தி எப்பொழுதும் வணங்கும்படியாக, அடியார் பலர் முன்பு திருவருள் செய்த ஆதிசேஷ சயனத்தையுடைய எம்பெருமான் மனம் பொருந்தி எழுந்தருளியிருக்கின்ற பூக்கள் நிறைந்த அழகிய நீண்ட மாடங்களையும் நீண்ட மதிள்களையுமுடைய திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தினது உலகம் எங்கும் நிறைந்த புகழை நாம் பாட, நம்மிடத்துள்ள வினைகள் ஒன்றும் நில்லாமல் கெட்டவிடும்.

    வி - கு :
‘வணங்க அருளிய அப்பன்’ என்க, ‘அப்பன் உறையும் திருவாறன் விளை’ என்க.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1திருவாறன்விளையிலே புக்கு அடிமை செய்கைக்கு விரோதியானவை எல்லாம் அவனுடைய மிக்க புகழைப் பாடப் பறந்துபோம்’ என்கிறார்.

    மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க -மலர்ந்திருந்துள்ள திருவடிகளாகிற செவ்விப்பூக்களை என்னுடைய மனத்திலே எப்போதும் இருத்தி, அந்நினைவு 2போய்க்கனக்க அதனாலே செருக்கு அற்றவனாய்க்கொண்டு திருவடிகளிலே விழும்படியாக. பலர் அடியார் முன்பு அருளிய - ஸ்ரீ வேதவியாச பகவான், ஸ்ரீ வால்மீகி பகவான், ஸ்ரீ பராசர பகவான், ‘இன்கவி பாடும் பரமகவிகள்’ என்று சொல்லப்படுகிற முதலாழ்வார்கள்

______________________________________________________________

1. ‘மவி புகழ் பாட நம்மேல் விலை ஒன்றும் நில்லாகெடுமே’ என்றதனைக்
  கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. போய்க்கனக்க - மிகவும் அதிகரிக்க.