| எல 
  
    | 400 | திருவாய்மொழி
      - ஏழாம்
      பத்து |  
எல்லாரும் உளராயிருக்க,
என் பக்கல் 1விசேட கடாட்சம் செய்வதே! 2‘பின்பு ஸ்ரீ ராகவர் சந்தோஷத்தினால்
இன்புற்றவராய்க் கொண்டு அனுமானை மிக்க பெருமையோடு பார்த்தார்’ என்கிறபடியே, முதலிகள் எல்லாரும்
இருக்கச்செய்தே திருவடி பக்கலிலே விசேஷ கடாட்சம் செய்தாற்போலேயாயிற்று, பலரும் உளராய்
இருக்க இவரை அங்கீகரித்தபடி. ‘3கிழக்குத்தை இராசாக்கள்
பொல்லாங்காலே இங்கே நலிவு பிறக்குமளவிற்செய்வது என்?’ என்று எம்பெருமானார் அதனை
நினைந்தருளி, ‘இத்தேசத்தை விடாதே நோக்கிக்கொண்டு கிடந்தோம்; இவ்விடத்துக்கும் அழிவு
வரும்படி ஆசுரவர்க்கம் மேலிடாநின்றது; மேல் செய்ய அடுப்பது என்?’ என்று பெரிய நம்பிக்கு
அறிவிக்க, ‘நான் பெருமாளுடைய திரு எல்லையிலே ஒரு பிரதக்ஷணம் வரும்படியாக உம்முடைய சிஷ்யர்களிலே
ஒருவரைப் போர விடுவது’ என்ன, ‘அதற்கு ஆவார் ஆர்?’ என்ன, ‘என் பின்னே போராநின்றால்
‘ஒருவன் பின்னே போகாநின்றேன்’ என்று தன் நெஞ்சிற்படாதே சாயை போலே என்னைப் பின் செல்வான்
ஒருவனாக வேணும்’ என்ன, ‘அதற்கு ஆவார் அர்?’ என்ன, ‘ஆழ்வானைப் போக விடலாகாதோ?’
என்றாராம். ஆக, பல முதலிகள் இருக்க, ஆழ்வானைக் கொடுத்தாற்போலே என்றபடி.
 பாம்பு அணைய அப்பன்
அமர்ந்து உறையும் - பரியங்க வித்தியையிற் சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய
சர்வேஸ்வரன், அப்படுக்கையைக்காட்டிலும் விரும்பி வசிக்கும் தேசமாயிற்று. மலரின் மணி நெடுமாடங்கள்
- தேவர்கள் பெய்த மலர்களோடு கூடி, மணிமயமான ஓக்கத்தையுடைத்தாய், ஓங்ஙின மதிளையுமுடைத்தான
திருவாறன்விளை.
 
_______________________________________________________________ 
1. விசேஷ கடாட்சம் செய்வதாவது,
திருவாய்மொழி பாடுவித்துக்கொள்ளுகை.
 
 2. பலர் அடியார் முன்பு
விசேஷ கடாட்சம் செய்தமைக்குத் திருஷ்டாந்தம்
 காட்டுகிறார், ‘பின்பு’ என்று தொடங்கி.
 
 ‘ப்ரீத்யா ச ரமமாண: அத ராகவ:
பரவீரஹா
 பஹூமாநேந மஹதா ஸநூமந்தம்
அவைக்ஷத’
 
 என்பது, ஸ்ரீராமா. சுந். 64 :
39.
 
 3. பலர்
அடியார் முன்பு அருளினதற்கு வேறும் ஒரு திருஷ்டாந்தம்
 காட்டுகிறார், ‘கிழக்குத்தை’ என்று தொடங்கி.
கிழக்குத்தை இராசாக்கள்
 - கிருமி கண்ட சோழன்; இரண்டாங்குலோத்துங்கன்.
 |