| உலகம 
  
    | 
பத்தாந்திருவாய்மொழி
-
பா. 6 | 401 |  
உலகம் மலி புகழ் பாட -
1ஈண்டின இடத்தில் வெள்ளம் போலே உலகத்தில் அடங்காதபடியான அவனுடைய கல்யாணகுணங்களைப்
பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்க்கொண்டு பாட. நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும் -
2பாபம் போகைக்காகத் தனித்து ஒரு முயற்சி செய வேண்டா; பால் குடிக்க நோய்
தீருமாறு போலே நம்முடைய பாபங்கள் தாமே நசித்துப் போம். 
(5) 
                    
767 
        ஒன்றும்நில்
லாகெடும் முற்றவும் தீவினைஉள்ளித்
தொழுமின் தொண்டீர்!
 அன்றங்கு அமர்வென்று
உருப்பிணி
 நங்கை அணிநெடுந்
தோள்புணர்ந்தான்
 என்றும் எப்போதும்
என்நெஞ்சம்
 துதிப்ப உள்ளேஇருக்
கின்றபிரான்
 நின்ற அணிதிரு
வாறன்விளை
 என்னும்
நீணக ரமதுவே.
 
 பொ - ரை :
உருக்குமிணிப்பிராட்டி காரணமாகச் சிசுபாலன் போருக்கு வந்த அக்காலத்தில் போரிலே அவனை வென்று
உருக்கு மிணிப் பிராட்டியினது அழகிய நீண்ட தோள்களைச் சேர்ந்தவனும், எல்லாக் காலத்திலும்
எல்லா நேரத்திலும் என் நெஞ்சமானது துதிக்க என் மனத்திற்குள்ளே எழுந்தருளியிருக்கின்ற உபகாரகனுமான
எம்பெருமான் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்ற அழகிய திருவாறன்விளை என்னும் பெரிய
நகரத்தைத் தொண்டீர்! நினைத்து வணங்குங்கோள்; தீவினைகள் ஒன்றும் நில்லாவாய் முழுவதும் அழிந்துவிடும்.
 
 வி - கு :
‘நீள் நகரமது தொண்டீர், தொழுமின்; தீவினை முற்றவும் கெடும்,’ என்க.
 
_______________________________________________________________ 
1. ‘மலி’ என்பதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘ஈண்டின’ என்று தொடங்கி.ஈண்டின இடத்தில் - குறுகிய இடத்தில்.
 
 2. ‘புகழ்
பாடுதல் பாவத்தைப் போக்குவதற்குச் சாதகமாகவோ?’ என்ன,
 ‘அன்று’ என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார,
‘பாபம்’ என்று
 தொடங்கி.
 |