முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

768

404

திருவாய்மொழி - ஏழாம் பத்து

                   768 

        நீணக ரமது வேமலர்ச்
             சோலைகள் சூழ்திரு வாறன்விளை
        நீணக ரத்துறை கின்றபிரான்
             நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
        வாணபுரம் புக்குமுக் கட்பிரானைத்
             தொலையவெம் போர்கள் செய்து
        வாணனை ஆயிரம் தோள்துணித்தான்
             சரண்அன்றி மற்றொன்று இலமே.

   
பொ-ரை : நீண்ட நகரம் அதுவே என்னும்படி மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் பெரிய நகரத்திலே நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்ற உபகாரகனும், நெடுமாலும், விண்ணவர்கோனும், வாணாசுரனுடைய நகரத்திலே புக்கு, சிவபெருமான் தோற்கும்படி கொடிய போர்களைச் செய்து வாணாசுரனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவனுமான கண்ணன் திருவடிகள் அல்லாமல் வேறு கதியுடையோம் அல்லோம்.

    வி-கு :
‘தொலையப் போர்கள் செய்து துணித்தானாகிய கண்ணனுடைய சரண்’ என்க.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘திருவாறன்விளையே பிராப்பியம் என்னாநின்றீர்; அவன் அன்றோ பிராப்பியன்?’ என்ன, ‘அன்று என்ன வல்லேனோ? என் சித்தாந்தம் இருக்கும்படி கேட்கலாகாதோ?’ என்கிறார். ‘உபாசனத்தின் பலமாய் வருமவையெல்லாம் பிராப்பியத்திலே சேர்ந்தனவாகக் கடவன; அன்றிக்கே, 2‘சாத்தியத்தின்

_____________________________________________________________

1. ‘‘நீள் நகரம் அதுவே’ என்றவதனால் பலித்த பொருள், திருவாறன் விளை
  இனியது என்னுமதுவே அன்றோ? அதனைத் திருவுள்ளம் பற்றி
  அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘என்னாநின்றீர்’ என்றது, ‘மேல்
  திருப்பாசுரங்களிலே அருளிச்செய்தீர்’ என்றபடி. உம்முடைய
  சித்தாந்தமானாலும் பொருத்தமாக இருக்க வேண்டாவோ?’ என்ன,
  ‘உபாசனத்தின் பலமாய் என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். என்றது, பிராப்பியனான சர்வேஸ்வரனை ஒரு தேச
  விசேஷத்திலே போய் அனுபவிக்க வேண்டுகையாலே அத்தேசமும்
  பிராப்பியம் என்றபடி.

      உபாசன பலமாய் வருமவையாவன: ஆஸ்ரயணத்தின் பலமான
  அர்ச்சிராதிகதி, திவ்வியதேசப் பிராப்தி முதலாயின.

2. மேலதற்கே வேறும் ஒருவகையில் பரிகாரம் அருளிச்செய்கிறார்,
  ‘சாத்தியத்தின்’ என்று தொடங்கி. என்றது, ‘சாத்தியத்திற்கு முதல்