முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

406

திருவாய்மொழி - ஏழாம் பத்து

‘இவன் காரியத்துக்கு எல்லாம் நானே கடவன்’ என்று இருக்கிறவனுடைய செருக்கு எல்லாம் தொலைந்து, ‘நான் இனி ஒரு தேவதையாய் ஒருவன் காரியத்துக்குச் செருக்குற்று இரேன்’ என்னும்படி கொடிய போர்களைச் செய்து. 1‘கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ - 2‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்னுமாறு போலே, தேவதைகளுக்கு நம்மைக்காட்டிலும் அறிவு கேடு விஞ்சியிருக்கும். 3ஒரு வில்லை முரித்த போதாக ‘விஷ்ணுவை அதிகனாக எண்ணினர்’ என்கிறபடியே இருப்பர்களாயிற்று, தேவசாதியாக. வாணனை ஆயிரம் தோள் துணித்தான் - 4‘உஷை தந்தை இல்லாதவள் ஆகவொண்ணாது,’ என்று பார்த்து, உயிர் இருக்கத் தோளைக் கழித்துவிட்டானாயிற்று. சரண் - அவன் கடகன்; திருவாறன்விளையே பிராப்பியம். 5பிராப்பியனானவன் வந்து எழுந்தருளியிருக்கும் தேசம் ஆகையாலே அவனுடைய சம்பந்தத்தாலே அத்தேசமும் பிராப்பியம் என்கைக்குத் தட்டு இல்லை. 6ஓர் அறப்பெரியவன் உபாயமாய்ப் பலத்தைக் கொடுக்

__________________________________________________

1. ‘அவன் அப்படித் தோற்றானோ?’ என்ன, தோற்றதனால் ‘அன்றோ துதி
  செய்தான்?’ என்கிறார் ‘கிருஷ்ண’ என்று தொடங்கி.

    ‘க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
    பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதநம் பரம்’

என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 33 : 41.

2. ‘ஈஸ்வராத் ஜ்ஞாநம் அந்விச்சேத் - சிவபெருமானிடத்தினின்றும்
  ஞானத்தை விரும்பக்கடவன்’ என்னும்படியான ஞானவானான
  சிவனுக்கும் அஜ்ஞாநம் உண்டோ? இந்தச் சுலோகத்தில் ‘ஜாநே -
  அறிவேன்’ என்பான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘யானைக்கும்’ என்று தொடங்கி.

3. மேற்கூறியதனை விளக்குகிறார், ‘ஒரு வில்லை’ என்று தொடங்கி.

    ‘அதிகம் மேநிரே விஷ்ணும்’

என்பது, ஸ்ரீராமா, பால. 75  : 19.

4. தலையை அறுக்காமல் தோள்களைக் கழித்ததற்குக் காரணத்தை
  அருளிச்செய்கிறார், ‘உஷை’ என்று தொடங்கி.

5. ‘உபாசன பலமாய் வருமது ஆகையாலே பரமபதம் அன்றோ பிராப்பியம்?
  திருவாறன்விளை பிராப்பியமாகக் கூடுமோ?’ என்ன, பிராப்பியனானவன்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

6. ‘உபாயமும் திருவாறன்விளை ஆனாலோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘ஓர் அறப்பெரியவன்’ என்று தொடங்கி.