முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

பத்தாந்திருவாய்மொழி - பா. 8

407

கிறவனாக வேணுமே: ஆகையாலே, அவன் உபாயம்; அத்தேசம் பிராப்பியம். அன்றி மற்று ஒன்று இலமே - இங்ஙன் அல்லது உபேய உபாயங்கள்  மாறாக்கடவோம் அல்லோம்.

(7)

                  769

    அன்றிமற்று ஒன்றுஇலம் நின்சரணே
        என்றுஅக லிரும்பொய்கை யின்வாய்
    நின்றுதன் நீள்கழல் ஏத்திய
        ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான்
    சென்றுஅங்கு இனிதுறை கின்ற
        செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை
    ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ?
        தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.

   
பொ - ரை : ‘உன்னுடைய திருவடிகளே அல்லாமல் வேறு ஒரு உபாயத்தையுடையோம் அல்லோம்’ என்று, அகன்ற பெரிய பொய்கையிலே தன்னுடைய நீண்ட திருவடிகளைத் துதித்த யானையினது மனத்தின்கண் இருந்த துன்பத்தை நீக்கிய உபகாரகனானவன் அங்குச் சென்று எழுந்தருளியிருக்கின்ற வளப்பம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தைப் பொருந்தி வலம் வருதல் கூடுமோ? கூடுமாயின், தீவினைகள் உள்ளத்தின் பொருத்தத்தையுடையன அல்லவாம்.

    வி-கு :
‘சென்று’ என்றது, ‘அடியார்களுக்குத் திருவருள் செய்வதற்காகச் சென்று’ என்றபடி.

    ஈடு :
எட்டாம் பாட்டு. 1‘திருவாறன்விளையிலே புக நம்முடைய எல்லாத் துக்கங்களும் போம்,’ என்கிறார்.

    நின் சரணே அன்றி மற்று ஒன்று இலம் என்று - உன் திருவடிகளை அல்லது வேறு ஒரு பற்று உடையேன் அல்லேன் என்று. என்றது, 2புறம்பே சிலர் இரட்சகராக மயங்கி இருக்கு

_______________________________________________________________

1. திருவாறன்விளை ஒன்றி வலஞ்செய்ய, தீவினை உள்ளத்தின் சார்வு
  அல்லவே?’ என்ற பதங்களைக் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ‘மற்று ஒன்று இலம்’ என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘புறம்பே’
  என்று தொடங்கி.