என
முதல் திருவாய்மொழி - பா.
10 |
41 |
என்பரஞ்சுடரே!
என்றுன்னை அலற்றி
உன்இணைத்
தாமரை கட்கு
அன்புருகி நிற்குமது
நிற்கச் சுமடு தந்தாய்
வன்ப ரங்கள்
எடுத்து ஐவர் திசைவலித்து
ஏற்று
கின்றனர்
முன்பரவை கடைந்த
அமுதம் கொண்ட மூர்த்தியோ!
பொ-ரை :
‘என் பரஞ்சுடரே! முற்காலத்தில் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதங்கொண்ட மூர்த்தியே!’ என்பதாக
உன்னையே அலற்றி உனது இரண்டு திருவடிகட்கு அன்போடு உருகி நிற்குமது ஒழிய, சரீரமாகிய சும்மாட்டைக்
கொடுத்தாய்; ஐவர், வலிய விஷயங்களாகிய பாரங்களைச் சுமத்தித் திக்குகள் தோறும் இழுத்துத்
தாக்குகின்றனர்; அந்தோ!
வி-கு:
சுமடு-சும்மாடு, ஐவர் - ஐம்பொறிகள், வலித்து - இழுத்து, ‘ஓ’ என்பது, துக்கத்தின் மிகுதியைக்
காட்ட வந்தது.
ஈடு:
பத்தான் பாட்டு. 1‘அடிமைக்கு விரோதியாய் விஷய அனுபவத்திற்குப் பாங்கான உடம்பைத்
தந்தாய்; அதுவே காரணமாக ஐந்து இந்திரியங்களும் நலியாநின்றன; அவற்றைப்
போக்கியருளவேண்டும்!’ எனத் துயரத்தோடு கூப்பிடுகிறார்.
என் பரஞ்சுடரே என்று
உன்னை அலற்றி - ‘எனக்கு உன் வடிவழகினைக் காட்டி உபகரிக்குமவனே!’ என்று உன்னைக் குறித்து
அடைவுகெடக் கூப்பிட்டு. உன் இணைத் தாமரைகட்கு அன்பு உருகி நிற்குமது நிற்க - ஒன்றுக்கு ஒன்று
ஒப்பாய் இருப்பன இரண்டு செவ்விப்பூப் போலே இருக்கிற உன் திருவடிகளில் இனிமையை நினைத்து அன்பு
வசப்பட்டவனாய் நெகிழ்ந்து நீராய் நிற்கை இவ்வாத்துமாவுக்குச் சொரூபமாகக் கடவது. சொரூபம்
இதுவாக இருக்க, சுமடு தந்தாய் - உன் பக்கலினின்றும் அகற்றி விஷயங்களிலே கொடுபோய் மூட்டக்
கூடியதான சரீரத்தைத் தந்தாய்; என்னை அனுபவிக்கைக்கு உறுப்பாகச் சரீரத்தைத் தந்தாயானாய் நீ;
அதுதானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று. 2இராஜபுத்திரன் தலையில் முடியை வாங்கிச்
சும்மாட்டைக்கொண்டு வழியிலே நின்றால், அடி அறியாதார் சுமை எடுத்துக்கொண்டு
_____________________________________________________________________
1. ‘சுமடு தந்தாய், ஏற்றுகின்றனர்,
அமுதம் கொண்ட மூர்த்தியோ’
என்பனவற்றைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘அது நிற்கச்
சுமடு தந்தாய்’ என்பதற்குத் திருஷ்டாந்தம் கட்டுகிறார்,
‘இராஜபுத்திரன்’ என்று தொடங்கி.
அடி அறியாதார் - இராஜபுத்திரன்
என்ற காரணம் அறியாதார்.
|