முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

410

திருவாய்மொழி - ஏழாம் பத்து

மிடம் சொல்லவேண்டுமோ? 1பிராமாதிகத்துக்கு அஞ்சவேண்டாமை பத்தி யோகத்துக்கு உண்டு அன்றோ?

    ஏத்திய - 2முட் பாய்ந்தால் ‘அம்மே!’ என்பாரைப்போலே, வாசனையாலே சொன்ன இத்தனை. ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் - 3துதிக்கை முழுத்தின இடரே அன்றோ? நீண்ட கை குறுகும் அளவுமன்றோ பார்த்து நின்றது? இவன் கை விட்டால் கைக்கொள்ளாநின்றானித்தனை அன்றோ? அன்றிக்கே, 4‘இந்தப் பூவின் செவ்வி மாறுவதற்கு முன்னே திருவடிகளிலே சார்த்தப் பெறுகின்றிலோம்!’ என்னும் இடரைப் போக்கினான் ஆயிற்று. அன்றிக்கே, ‘நம் காரணமாகச் சர்வேஸ்வரனுக்கு ஒரு தாழ்வு வருகிறதோ?’ என்னும் இடராதல். என்றது, ‘இவன் இப்படி வருந்த அவன் காத்தபடி அழகியதாய் இருந்தது! இவனையோ நாம் இப்படிக் காப்பவன் என்று நினைத்திருந்தது?’ என்று உலகத்தார் இவனை இப்படி நினைக்கின் செய்வது என்?’ என்று துன்புற்ற துன்பத்தைத் தெரிவித்தபடி. 5‘இரண்டும் போய் இரண்டின் வீடி’ என்கிறபடியே இரண்டற்கும் இடர் வாராதபடி ஒன்றுக்கே இடர் வரும்படி கரையிலே கொண்டு ஏறி, பின்னர் முதலை வாயினைக்

_____________________________________________________________

1. ‘பிராமாதிகத்துக்கு ஒழிய, புத்தி பூர்வகத்துக்கும் அஞ்ச வேண்டா
  என்கிறது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘பிராமாதிகத்துக்கு’ என்று தொடங்கி. என்றது, பக்தி நிஷ்டரினின்றும்
  வேறுபடுத்தியபடி.

2. ‘நினைக்கவும் சத்தி இல்லாத யானை ஏத்துதல் எப்படி?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார்,  ‘முட்பாய்ந்தால்’ என்று தொடங்கி.

3. ‘இந்தச் சமயத்தில் யானையின் இடரைப் போக்குகிறவன்
  தொடக்கத்திலேயே போக்க ஒண்ணாதோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘துதிக்கை’ என்று தொடங்கி.

4. யானையின் நெஞ்சு இடர் இன்னது என்றும், அதனை நீக்கிய பிரகாரமும்
  அருளிச்செய்கிறார், ‘இந்தப் பூவின்’ என்று தொடங்கி, ஆக, ‘நெஞ்சு
  இடர்’ என்பதற்கு மூன்று வகையாகப்பொருள் அருளிச்செய்தபடி.

5. நெஞ்சு இடர் தீர்த்ததற்குப் பிரமாணம் அருளிச்செய்கிறார், ‘இரண்டும்
  போய்’ என்று தொடங்கி. என்றது, ‘முதலையும் யானையுமாகிற இரண்டும்
  ஒன்றை ஒன்று விட்டுப் போய் இரண்டற்கும் சாப மோக்ஷமும் சாக்ஷாத்
  மோக்ஷமும் உண்டாம்படி திருவுள்ளம் பற்றியருளினாய்’ என்றபடி, இது,
  நான்முகன் திருவந். 12.