க
பத்தாந்திருவாய்மொழி
-
பா. 8 |
411 |
கிழித்து யானையின்
இடரை நீக்கினானாயிற்று. இங்கே, 1‘இராசபுத்திரனைச் சிறையிலே இட்டு வைத்தால்
கைக்கூட்டனுக்கும் பாலுஞ்சோறும் இடுவாரைப்போலேகாண்,’ என்று இதற்குப் பட்டர்
அருளிச்செய்வர். 2இரண்டும் மோட்சத்தைப் பெற்றதே! முதலை சாப மோட்சமும்,
ஸ்ரீகஜேந்திராழ்வான் சாக்ஷாத் மோட்சமும் பெற்றமையைத் தெரிவித்தபடி.
பிரான் - யானையின்
இடரைப் போக்கின இதுவும், அதற்கு அன்றித் தமக்கு உதவி செய்தானாக நினைத்திருக்கிறார்காணும்
இவர். 3இவ்வெண்ணத்தை உடையவனாகை அன்றோ ஒருவன் வைஷ்ணவன் ஆகையாவது?
என்றது, அநுகூலரிலே ஒருவனுக்கு ஒரு நன்மை உண்டானால் அது தன்னதாக நினைத்திருக்கையும் கேடு வந்தால்
அதனைத் தனக்கு வந்ததாக நினைத்திருக்கையுமாகிற இவ்விரண்டும் உண்டானால் அன்றோ வைஷ்ணவத்துவம்
உண்டாயிற்றவது?’ என்றபடி. சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ - 4இவன் உதவாத அன்று அவ்யானைக்கு உள்ள இடரைப் போன்று
போருமாயிற்று. அத்தேசத்தை அடையாத போது சர்வேஸ்வரனுக்கு உண்டான இடரும். அவன் வந்து தன்
ஆதரம் எல்லாம் தோன்ற வசிக்கின்ற அழகிய பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையைக் கிட்டி
வலஞ்செய்தல் முதலானவற்றைச் செய்யக் கிட்டுமோ? தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே -
5அப்போது தீவினை
________________________________________________________________
1. இரண்டற்கும் மோட்சம்
வருவான் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இராசபுத்திரனை’ என்று தொடங்கி. கைக்கூட்டன்
- காவற்காரன். இதற்கு - ‘இரண்டின் வீடு’ என்றதற்கு.
2. ‘முதலையும் மோட்சத்தைப்
பெற்றதோ?’ என்ன. ‘ஆம்’ என்று அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘இரண்டு’ என்று தொடங்கி.
பெற்ற விதத்தை
அருளிச்செய்கிறார், ‘முதலை’ என்று தொடங்கி. சாபமோட்சம் - சாபம்
நீங்குதல்.
3. இதனால் சொரூபத்தின்
ஓர் அர்த்தத்தை அருளிச்செய்கிறார்.
‘இவ்வெண்ணத்தை’ என்று தொடங்கி. இதனை விவரணம் செய்கிறார்,
‘அநுகூலரிலே’ என்று தொடங்கி.
4. ‘சென்று’ என்பதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘இவன் உதவாத’ என்று
தொடங்கி.
5. அப்போது
- கிட்டின போது.
|