உள
412 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
உள்ளத்தின் சார்வு ஆகாது.
1‘ஒளியும் இருளும் சேர்ந்து இருத்தல் உண்டோ?’ என்றது, ‘அவன் வந்து நித்தியவாசம்
செய்யத் தீவினை ஒதுங்க இடம் உண்டோ?’ என்றபடி.
(8)
770
‘தீவினை உள்ளத்தின்
சார்வல்ல
வாகித் தெளிவிசும்பு
ஏறலுற்றால்
நாவினுள் ளும்உள்ளத்
துள்ளும்
அமைந்த தொழிலினுள்
ளும்நவின்று
யாவரும் வந்து
வணங்கும்
பொழில்திரு
வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து
கைதொழக்
கூடுங்கால்?’
என்னுமென் சிந்தனையே.
பொ-ரை :
தீய வினைகள் ஆத்துமாவைத் தீண்டாதனவாகி நீங்க, பரமபதத்தை அடையலுற்றாலும், நாவாலும் மனத்தாலும்
பொருந்திய தொழிலாலும் பயின்று யாவரும் வந்து வணங்குகின்ற சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை
என்னும் திவ்விய தேசத்தைப் பொருந்தி வலம் வந்து கையால் தொழுவதற்குக் கிட்டுமோ?’ என்று நினையாநின்றது
என் மனமானது.
வி-கு :
‘என் சிந்தனை, ‘தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவாகத் தெளிவிசும்பு ஏறல் உற்றால், திருவாறன்விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னும்,’ என்க. தெளிவிசும்பு - பரமபதம். ‘நாவினுள்ளும்
உள்ளுத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும்’ என்றது, மனம் வாக்குக் காயங்களைக் குறித்தபடி.
ஈடு : ஒன்பதாம்
பாட்டு. 2‘எனக்கு ஸ்ரீவைகுண்டமும் திருவாறன்விளையும் இரண்டும் கிடைப்பதானால், ஸ்ரீவைகுண்டத்தை
விட்டுத் திருவாறன்விளையே அமையும் என்னும் என் நெஞ்சம்’ என்கிறார்.
_______________________________________________________________
1. ‘வலஞ்செய்தல் முதலியவற்றைச்
செய்தால் பாபம் தீண்டாமைக்குக்
காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘ஒளியும்
இருளும்’ என்று தொடங்கி.
2.
‘தெளிவிசும்பு ஏறல் உற்றால், திருவாறன்விளையதனை மேவி வலஞ்செய்து
கைதொழக் கூடுங்கொல்?’
என்னும் என் சிந்தனை,’ என்பதனைக்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|