முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1இவர

48

திருவாய்மொழி - ஏழாம் பத்து

1இவர் நமக்கே பரம் என்று அறிவித்தாராகில், நாமும் இவர் காரியம் செய்வதாக அற்ற பின்பு செய்து முடித்ததேயாமன்றோ? இவர் அங்குப் போய் அனுபவிக்கும் அனுபவம் இங்கே இருந்தே குறை அற அனுபவியா நின்றாரகில், ‘விரோதி போயிற்றில்லையே’ என்று இவர் கொள்ளுகின்ற ஐயமும் போக்குகிறோம்; நான்கு நாள் முற்பாடு பிற்பாடன்றோ? இதில் காரியம் என்?’ என்று இருந்தான். ‘பிற்பாடு பொறுக்கமாட்டாத இவரை வைக்கப் போருமோ?’ என்னில், குழந்தைகளைப் பட்டினி இட்டு வைத்தும் வந்த விருந்தினரைப் பேணுவாரைப் போல, ‘இவர்தாம் நான்கு நாள்கள் நோவு பட்டாராகில் படுகிறார்; இவருடைய பிரபந்தத்தைக் கொண்டு உலகத்தை வாழ்விப்போம்,’ என்றிருந்தான். 1இவர் ஒரு முகூர்த்த காலம் இருப்பதானது, தன்னாலும் திருத்த ஒண்ணாத சம்சாரம் திருந்தி வாழும்படியாயிருந்தது என்றதற்காக வைத்தான் அவன்; 2இவர், ‘நம்படி அறிந்தானாகில், தனக்குச் சத்தியில் குறை இல்லையாகில், இது பொருந்தாத நம்மை இட்டுக் காரியம் கொள்ள வேணுமோ? இவ்விருப்பில் பொருந்துவார் ஒருவரைத் திருத்திக் காரியங் கொள்ளத் தட்டு என்?’ என்றிருந்தார். 3அவனும், ‘அது பொருந்தாதாவரைக்கொண்டே காரியம் கொள்ள வேணும்’ என்றே அன்றே இருக்கிறது? 4தேசிகரைக்கொண்டு

____________________________________________________________________

1. ‘இவர் இங்கு இருந்தால் உலகம் திருந்துமோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இவர் ஒரு முகூர்த்த காலம்; என்று தொடங்கி.

2. ‘அந்த நிலை அறியும் இவர் விரைவதற்குக் காரணம் என்?’ என்ன, ‘இவர், நம்படி’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘இவ்விருப்பில் பொருந்துவார்’
  என்றது, திருமழிசைப் பிரான் போல்வாரை.

3. ‘நன்று; அவனும் இதில் பொருந்துவாரைக்கொண்டு காரியங் கொண்டால் என்?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவனும்’ என்று தொடங்கி.

4. அதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘தேசிகரை’ என்று தொடங்கி. ‘தேசிகர்’
  என்றது, ‘சம்சார தோஷத்தையும் பகவானுடைய வைலக்ஷண்யத்தையும் நன்கு
  அறிந்தவர்கள்’ என்றபடி. என்றது, ‘சம்சாரிகளைத் திருத்தும் போது சம்சாரத்தை
  வெறுக்கின்றவர்களைக் கொண்டே காரியம் கொள்ளவேண்டும்; அப்படி இன்றி,
  அதில் பொருந்துவாரைக்கொண்டு காரியம் கொண்டால் ‘தனக்கும் ஒன்றும் பிறர்க்கு
  ஒன்றுமாய் இவன் சொல்லுகிறபடி பாரீர்!’ என்றுகொண்டு அவர்கள் திருந்தார்கள்
  என்பது ஈஸ்வரனுக்குக் கருத்து’ என்றபடி.