க
இரண்டாந்திருவாய்மொழி - முன்னுரை |
49 |
காரியம் கொள்ள வேணுமே.
1செய்த சரணாகதி சடக்கெனப் பலியாதொழிந்தது, பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்த மாத்திரம்
அன்றோ?
2இனித்தான்
அவனும், ஸ்ரீ பரதாழ்வான் மாதுல குலத்தினின்றும் வந்து தாயாரை வணங்க, அவள், ‘ராஜந்’ என்ற வெம்மை
பொறுக்கமாட்டாமல் பெருமாள் திருவடிகளிலே தன் ஆற்றாமையோடே விழுந்து சரணம் புக்கு, ‘தேவரீர்
மீண்டருள வேணும்’ என்ன, பெருமாளும், மீளாமைக்குக் காரணமாயிருப்பன பலவற்றை அவனுக்குச்
சொல்லி, ‘பிள்ளாய்! நீ நிர்ப்பந்திக்கக் கடவையல்லை: உன்னைச் சுவதந்திரனாக்கி வார்த்தை
சொன்னார் எதிரே, உன் சொரூபத்திற்குத் தகுதியான பாரதந்திரியத்தைப் பெற்று நீ போ,’ என்று
சொன்னாற்போலே, இவர் விரும்பியது ஒழிய ஏதேனும் ஒன்றனைக் கொடுத்துப் போகட்டுப் போக வல்லான்
ஒரு சுவதந்திரன் அல்லனோ? ஆகையாலே, தான் நினைத்த போது காரியம் செய்யக் கடவனுமாய் இருப்பன்
அன்றோ? 3முற்றறிவினனான சர்வேஸ்வரன் இவர்க்கு ஒடுகிற தசையை அறிந்து, தன்னுடைய
வரம்பில் ஆற்றலைக் கொண்டு இவர்க்கு ஒரு பரிகாரம் செய்ய ஒண்ணாதபடி இவருடைய நிலை விசேடம்
இருக்கிறபடி.
4இவர்தாமும்
‘விண்ணுளார் பெருமானேயோ’ என்றும் ‘முன் பரவை கடைந்து அமுதங்கொண்ட மூர்த்தியோ!’ என்றும்,
‘பல முதல் படைத்தாய்!’ என்றும் சொல்லுகிறபடியே, பரத்துவம், அவதாரம், உலகத்திற்குக் காரணமாய்
இருக்குந் தன்மை இவற்றைச்
_____________________________________________________________________
1. ‘அங்ஙனமாயின், அவன்
திருவுள்ளத்தை அறிந்திருக்கும் இவர் கூப்பிடுவான் என்?’
எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘செய்த சரணாகதி’ என்று தொடங்கி.
2. ‘பிற்பாடு பொறுக்கமாட்டாத
இவரை வைக்கப் போருமோ?’ என்னில், என்று மேலே
அருளச்செய்த சங்கைக்கு வேறும் ஒரு பரிகாரம்
அருளிச்செய்கிறார், ‘இனித்தான்
அவனும்’ என்று தொடங்கி. என்றது, ‘ஸ்ரீ பரதாழ்வானை வைத்தாற்போலே
சுவாதந்திரியத்தாலே வைத்தான்’ என்றபடி.
3. ‘ஈஸ்வரனுடைய முற்றறிவிற்கும்’
என்று தொடங்கி மேலே அருளிச்செய்த
வாக்கியத்தை விவரணம் செய்கிறார், ‘முற்றறிவினனான’ என்று
தொடங்கி.
4. இது காறும்
‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில் சொல்லப்பட்ட பொருளை
அநுவதித்தார்; அநுவதித்து, இத்திருவாய்மொழிக்கு
இயைப் அருளிச்செய்கிறார்.
‘இவர்தாமும்’ என்று தொடங்கி. ‘உலகத்திற்குக் காரணனாய் இருக்குந்தன்மை’
என்றது, வியூகத்தை.
|