முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

கள

இரண்டாந்திருவாய்மொழி - முன்னுரை

51

களாலே தாம் பிராட்டிமார் நிலையையுடையராகிறார்; ‘திருத்தாயாரான நிலை விளைந்தபடி எங்ஙனே? விளைந்ததாகில் இவருடைய காதலுக்குக் குறைவு வாரோதோ?’ என்ன, கிண்ணகம் பெருகி ஓடாநின்றால் இரு கரையும் ஆறுகளாகப் பெருகிப் போகாநிற்கச் செய்தேயும் கடலிற்புகும் பாகம், குறையாமல் போய்ப் புகுமாறு போலே ஆயிற்று, இவருடைய ‘அதனிற்பெரிய என் அவா’ என்கிற பேரவாக் குறையாது இருக்கிறபடி. ஆகையாலே, 1இவரக்கு எல்லார் பேச்சும் பேசக் குறை இல்லை. 

    2
இப்பெண் பிள்ளை மோகித்துக் கிடக்க, இவளைக் கண்டு உறவு முறையார் அடங்கலும் மோகித்துக் கிடக்க; 3பெருமாளைக் காட்டிலும் இளையப்பெருமாளுக்குத் தளர்த்தி உண்டாயிருக்கச் செய்தே, பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளையப்பெருமாள் உணர்ந்திருக்குமாறு போலே, திருத்தாயாரும் இவளுடைய இரட்சணத்துக்காக உணர்ந்திருந்து, எந்த நிலையிலும் தங்கள் காரியம் தலைக்கட்டும் குடியாகையாலே, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவளை இட்டு வைத்துக்கொண்டிருந்து, ‘இவள் அழுவது, தொழுவழு. மோகிப்பது, பிரலாபிப்பது, அடைவு கெடப் பேசுவது, நெடுமூச்சு எறிவது, அது தானும் மாட்டாது ஒழிவது, தன்னை மறந்திருப்பது, இப்படி அரதி விஞ்சிச் செல்ல நின்றது; இவள் திறத்தில் நீர் என் செய்யக் கடவீர்?’ என்று கூப்பீடாய்ச் செல்லுகிறது, 4எல்லா அளவிலும் அவனையே பரிகாரம் கேட்கும் குடியே அன்றோ?

_____________________________________________________________________

1. ‘ஞானத்தில் தம் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு,’ தேறும் கலங்கி என்றும்
  தேறியும் தேறாதும் ஸ்வரூபம் குலையாது.’ ‘பெருக்காறு பலதலைத்துக் கடலை
  நோக்குமாபோலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப் பெருகு
  காதல் கடல் இடங்கொண்ட கடலை பஹூமுகமாக அவகாஹிக்கும்’ என்றும்
  ஸ்ரீசூக்திகள் இங்கு அநுசந்தேயம். (ஆசார்யஹ்ருதயம், துவிதிய பிரகரணம்,
  சூ.32,33,45.)

2. இத்திருவாய்மொழியில் வருகின்ற நாயகி துன்புறும் வகைகளை விரிவாக
  அருளிச்செய்கிறார், ‘இப்பெண் பிள்ளை’ என்று தொடங்கி.

3. ‘உறவினர் அடங்கலும் மோகித்துக் கிடந்தார்களாகில், திருத்தாயார் உணர்ந்திருக்கும்படி
  யாங்ஙனம்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பெருமாளைக்காட்டிலும்’
  என்று தொடங்கி.

4. ‘அவனைக் கேட்பது என்? தாங்களே தீர்த்துக்கொள்ளலாகாதோ?’ என்ன,
  ‘எல்லாவளவிலும்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.