ஆண
52 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
ஆண்டாள்
ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்: இவ்விடையாட்டம்
ஒன்றும் ஆராயாதிருக்கிறது என்?’ என்ன, ‘பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச்
சொல்லுகிறாயோ? நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள, அங்கே வரக் காட்டு, என்ன, பட்டரையும்
சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போகவிட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க,
‘ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திருவுள்ளமாக, ‘இவர்கள் விவாகம் செய்வதற்குத்
தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னாநின்றார்கள்’ என்று விண்ணப்பம் செய்ய, ‘எல்லாம், செய்கிறோம்’
என்று திருவுள்ளமானார்; பிற்றைநாளே மன்னியைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அகளங்க பிரஹ்மராயர்
அடையவளைந்தான் செய்யாநிற்கச் செய்தே மதிள்போக்குகைக்காக இளையாழ்வான் அகத்தை
வாங்கப்புக, பட்டர் அதனைக் கேட்டருளி, ‘வாரீர் பிள்ளாய்! நீர் செய்கிற மதிள் பெருமாளுக்கு
இரட்சகம் என்று இராதே கொள்ளீர்; இங்குக் கிடக்கும் நான்கு குடிகளுங்காணும் பெருமாளுக்குக் காவல்;
ஆன பின்பு நீர் செய்கிறவை எல்லாம் அழகிது; இவை எல்லாம் நாம் செய்கிறோம் என்றிராதே,
பெருமாள் செய்விக்கிறார் என்று இரீர்; உமக்கு நல்வழி போக உடலாங்காணும்’ என்று அருளிச்செய்தார்.
இத்திருத்தாயாரும்
எல்லாப் பாரங்களையும் அவன் தலையிலே போகட்டுப் பெண்பிள்ளையைத் திருமணத் தூணுக்குள்ளே போகட்டுப்
பற்றிலார் பற்ற நிற்றல் முதலாகிய அவனுடைய குணங்களை விண்ணப்பம் செய்யாநின்றுகொண்டு, ஒரு
கால நியதியாதல், ஒருதேச நியதியாதல், அதிகாரி நியதியாதல் இன்றிக்கே எல்லாரும் சென்று பற்றலாம்படி
இருக்கிறபடியை நினைத்து, தன் பெண்பிள்ளையினுடைய நிலையைத் திருவுள்ளத்திலே படுத்துகிறாள் இத்திருவாய்மொழியாலே.
___________________________________________________________________
1. மேலதற்கு இரண்டு ஐதிஹ்யங்கள்
காட்டுகிறார், ‘ஆண்டாள்’ என்று தொடங்கியும்.,
‘அகளங்க பிரஹ்மராயர்’ என்று தொடங்கியும்,
‘மன்னி’ என்பது முன் பல
இடங்களில் வந்திருக்கிறது; இச்சொல், கன்னி அல்லது பன்னி என்றிருக்கலாம்
என்று நினைக்கிறேன்.
‘கன்னி
யிவள்பிறர் பன்னி எனதிரு கண்ணின் மணிநிகர் சன்மனும்’ என்பது,
வில்லிபாரதம். வேத்திரகீயச்சருக்.44.
|