674
இரண்டாந்திருவாய்மொழி - பா. 1 |
53 |
674
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்குசக் கரங்கள்’ என்றுகை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு!’ என்னும்;
இருநிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்!
இவள் திறந்து
என்செய்கின் றாயே?
பொ - ரை :
இரவும் பகலும் தூங்கி அறியாள்; கண்களினின்றும் பெருகுகிற நீரைக் கைகளால் இறைப்பாள்; ‘சங்கு
சக்கரங்கள்’ என்று சொல்லிக் கை கூப்பி வணங்குவாள்; ‘தாமரை போன்ற திருக்கண்கள்!’ என்றே
தளர்வாள்; ‘உன்னைப் பிரிந்து எப்படித் தரித்திருப்பேன்!’ என்பாள்’ பெரிய நிலத்தைக் கையால்
துழாவிப் பின் அதுவும் செய்யமாட்டாது இருப்பாள்; சிறந்த கயல்மீன்கள் பாய்ந்து செல்லுகின்ற
தண்ணீர் நிறைந்த திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பவனே! இவள் சம்பந்தமாக என்ன காரியத்தைச்
செய்யப் போகின்றாய்?
வி - கு :
‘இறைக்கும், கைகூப்பும், தளரும், என்னும், இருக்கும்’ என்பன, செய்யும் என் முற்றுகள்.
இத்திருவாய்மொழி.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
ஈடு :
முதற்பாட்டு, 1பேச்சுக்கு நிலம் அன்றிக்கே இருக்கிற இந்தப் பிராட்டியுடைய நிலையைப்
பெரிய பெருமாளுக்கு அறிவித்து, ‘இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்கிறாள்.
கங்குலும் பகலும்
கண்துயில் அறியாள்-2இவளை எப்போது கண் துயிலப் பண்ண இருக்கிறீர்? 3விரஹிணிகளுக்கு
ஓடுகிற
____________________________________________________________________
1. திருப்பாசுரம் முழுதினையும் கடாட்சீத்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘தூங்குதற்குரிய இரவும்
பகலும் கண்துயிலறியான்’ என்கிறவளுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘இவளை எப்போது’ என்று
தொடங்கி.
3. ‘கண்
துயில் அறியான்’ என்னாமல், ‘கங்குலும் பகலும்’ என்று
விசேடித்ததற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘விரஹிணிகளுக்கு’ என்று
தொடங்கி.
|