New Page 1
இரண்டாந்திருவாய்மொழி - பா. 1 |
55 |
துயில் அறியாள்’
என்கிறாள். 1‘இவள் கலந்த அன்று
உறங்கினாலும், இவள் இப்போது படுகிற நோயினை அனுபவித்த திருத்தாயார்க்கு அது ஒன்றாகத் தோற்றாதே!’
என்றது, 2‘இந்த நோய்க்குப் பூர்வாங்கமாய் வந்தது ஒன்றாகையாலே அதனை ஒன்றாக நினைக்கின்றிலள்’
என்றபடி. 3என்றும் சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தாரைப் போலே பிரிந்த நாள்களில்
இழவேகாணும் இவள் நெஞ்சிலே பட்டுக்கிடக்கிறது. அறியாள் -4உறக்கம் ஒக்க இருக்கச்செய்தே
‘கைங்கரிய விரோதி’ என்று கைவிட்டவரைக்காட்டிலும் இவளுக்கு உண்டான வாசியைத் தெரிவிப்பாள்,
‘அறியாள்’ என்கிறாள். முன்பு இல்லையாகிலும் இப்பிறவியில் மெய்ப்பாட்டால் பற்றி
விடவேண்டிற்று.
கண்ணநீர் கைகளால்
இறைக்கும்-தன் கையாலே கண் நீரை இறைக்கப்பாராநின்றாள். 5இவளுக்கு இந்த அறியாமை
எங்கும் ஒக்கத் தொடரப்பெற்றதில்லை! 6‘இந்த ஆற்றாமையில் எப்படியும் நாயகன்
வாராது இரான்’ என்று பார்த்து, அப்போதாகப் பகை கொண்டாட ஒண்ணாது; முதல் நடை தொடங்கிக்
காண
___________________________________________________________________
1. ‘நன்று; நாயகன் உறங்குகிற
போதும் இவள் உறங்காளோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இவள் கலந்த அன்று’ என்று
தொடங்கி,
2. அதனைக் காரணம் முன்னாக விவரணம்
செய்கிறார், ‘இந்த நோய்க்கு’ என்று
தொடங்கி. பூர்வாங்கமாவது, மேலே நடிக்கப்
போகிற செயலுக்கு அறிகுறியான
ஒரு செயல்.
3. ‘ஆனால், இவள் நெஞ்சில்
பட்டுக் கிடக்கிறதுதான் யாது?’ என்ன, ‘என்றும்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
என்றது, ‘சிறைக்கூடத்திலே பிறந்து
வளர்ந்தவர்கட்குக் கலவி தோன்றாதாற்போலே’ என்றபடி.
4. ‘அறியாள்’ என்றதனால்
இளையப்பெருமாளைக்காட்டிலும் இவளுக்கு இருக்கும்
வேறுபாட்டினைக் காட்டுகிறார், ‘உறக்கம்’ என்று
தொடங்கி. கைவிட்டவர்
-இளையப்பெருமாள். ‘முன்பில்லையாகிலும்’ என்றது, இளையப்பெருமாள்
திருவனந்தாழ்வானுடைய
அவதாரமாதலைத் திருவுள்ளம் பற்றி.
5. ‘நாயகன் வரும்’ என்கிற
தெளிவையும், உறக்கத்தை அறியாமையும் நினைத்து
வியாக்கியாதா ஈடுபடுகிறார், ‘இவளுக்கு’ என்று தொடங்கி.
‘எங்கும் ஒக்க’ என்றது,
‘நித்திரையில் அறியாமை போன்று, அவன் வரவிலும் அறியாமை தொடரப்
பெற்றதில்லை’ என்றபடி.
6. கண்ணநீரைக்
கைகளால் மாற்றுதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘இந்த
ஆற்றாமையில்’ என்று தொடங்கி.
பகை கொண்டாட-தடையாக.
|