இ
இரண்டாந்திருவாய்மொழி - பா. 1 |
57 |
இரு தோளனாக வேண்டுவது’
‘நான்கு தோள்களையுடைய அந்த உருவமாகவே ஆகக் கடவீர்’ என்றான் அன்றோ காண ஆசைப்பட்ட
அருச்சுனன்? 1‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய். என்னக் கணிசித்து, வலி இல்லாமையாலே
தலைக்கட்ட மாட்டாதே, விடாயன் கையை மடுத்துத் தண்ணீரை வேண்டுமாறு போலே, குறையும் அஞ்சலியாலே
தலைக்கட்டாநின்றாள்.
தாமரைக்கண் என்றே
தளரும் - 2அவ்வாழ்வார்கள் அளவு வந்து அலை எறிகிற கண்களின் அழகினைச் சொல்லப்
புக்கு, நடுவே தளராநின்றாள். என்றது, ‘உன் தாமரைக் கண்களால் நோக்காய்’ என்று சொல்லப்
புக்கு, நடுவே தளராநின்றாள் என்றபடி. 3‘கடையில் செந்நிறம் பொருந்திய கண்களையுடைய
ஸ்ரீராமபிரானைப் பாராதவளான காரணத்தால் மிக்க துக்கமுடையவளானேன்’ என்னுமாறு போலே. ‘தளருகிறது
என்? வேறு ஒன்றாலே போது போக்கினாலோ?’ என்பார்களே! உன்னை விட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும்-
4பரத்துவம் வியூகம் விபவம் என்னுமிவற்றில் ஆசைப்பட்டேனாய் ஆறி இருக்கிறேனோ?
உறக்கத்தாலே, சூது சதுரங்கத்தாலே போது போக்கலாம் விஷயத்திலேயோ அகப்பட்டது என்னும்.
5‘உம்முடைய வைலக்ஷண்ய நீர் அறிந்தால், நம்மைப் பிரிந்தார் தரிக்க
__________________________________________________________________
1. சங்கு சக்கரங்களோடே
வரவேண்டும் என்னாமல், ‘கைகூப்பும்’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘கூரார்’ என்று தொடங்கி.
இது, திருவாய். 6. 9:1. கணிசித்து-விரும்பி.
2. ‘சங்கு சக்கரங்கள்’
என்றதன் பின் ‘தாமரைக்கண்’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘அவ்வாழ்வார்கள்’ என்று
தொடங்கி. ‘உன் தாமரைக்
கண்களால்’ என்பது, திருவாய். 9.2.1.
3. தாமரைக்கண் என்று தளர்ந்ததற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘கடையில்’ என்று
தொடங்கி.
‘ராமம் ரக்தாந்த நயநம்
அபஸ்யந்தீ ஸூதுக்கிதா’
என்பது, ஸ்ரீராமா. சுந். 26:37.
4. ‘திருவரங்கத்தாய்’ என்றதனோடே
‘உன்னைவிட்டு’ என்றதனைக் கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார், ‘பரத்துவம்’ என்று தொடங்கி.
‘தாமரைக்கண்’ என்றதனைத்
திருவுள்ளம்பற்றி வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘உறக்கத்தாலே’
என்று
தொடங்கி, என்றது, ‘அகப்பட்டது விலக்ஷண விஷயத்திலே அன்றோ என்னும்,’
என்றபடி.
5. ‘விலக்ஷண
விஷயத்திலே அகப்பட்டாளாகில் நம்மை என் செய்யச் சொல்லுகிறாய்?’
என்ன, ‘உம்முடைய’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
|