முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இவள

இரண்டாந்திருவாய்மொழி - பா. 2

59

இவள்படி பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே காட்டுகிறாள். என்றது, ‘இராக்கதர்கள் தின்ற உடம்பைக் காட்டினாற்போலே, விரஹம தின்ற உடம்பைக் காட்டுகிறாள்’ என்றபடி. என் செய்கின்றாயே - இவள் திறம் செய்யப்பார்த்தது என்? 1உம்முடைய ஊரில் இருக்கும் பொருள்கள் பெற்றதும் பெற வேண்டாவோ, உம்மை ஆசைப்பட்ட இவள்?

(1)

                     675 

        என்செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
             என்னும்கண் ணீர்மல்க இருக்கும்
        என்செய்கேன் எறிநீர்த் திருவரங் கத்தாய்!
             என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்
        முன்செய்த வினையே முகப்படாய் என்னும்
             முகில்வண்ணா! தகுவதோ என்னும்
        முன்செய்திவ் வுலகம் உண்டுமிழ்ந் தளந்தாய்!
             என்கொலோ முடிகின்றது இவட்கே?

   
பொ - ரை : ‘என் தாமரைக்கண்ணா! என்ன செய்ய நினைக்கிறாய்?’ என்பாள்; கண்களில் நீர் நிறையும்படி இருப்பாள்; ‘அலைகள் வீசுகின்ற நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே! என்ன செய்வேன்?’ என்பாள்; வெம்மை தோன்றப் பலகாலும் மூச்சு விட்டு உருகுவாள்; ‘முன்னே செய்த பாவமே முகம் தோற்ற நில்லாய்’ என்பாள்; முகில்வண்ணா! தக்கதாமோ?’ என்பாள்; ‘இந்த உலகங்களை எல்லாம் முன்னே படைத்துப் பின்பு உண்டு உமிழ்ந்து அளந்தவனே! இவளுக்கு முடிகின்றது என்கொலோ?’ என்கிறாள்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 2‘இப்பெண்பிள்ளையினுடைய நிலை என்னாய் விளையக்கடவது?’ என்கிறாள்.

    என் செய்கின்றாய் - 3ஆற்றாமை மிகமிக அவனைக் கேட்குமித்தனை அன்றோ? என் தாமரைக் கண்ணா என்னும் -

__________________________________________________

1. ‘என் செய்கின்றாய்’ என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்,
  ‘உம்முடைய’ என்று தொடங்கி.

2. ‘என் கொலோ முடிகின்றது இவட்கே?’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

3. ‘‘என் செய்கின்றாய்?’ என்று தலைமகள் தலைமகனைக் கேட்பது என்?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘ஆற்றாமை’ என்று தொடங்கி.