முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

64

திருவாய்மொழி - ஏழாம் பத்து

நோக்கினாய் நீ அன்றோ?’ என்றது, ‘கரணகளேபரங்கள் இல்லாமல் கிடந்த இதனை வெறும் உன் கிருபையாலே உண்டாக்கினாய் இத்தனை அன்றோ? உண்டாக்கிவிட்ட அளவையோ? பிரளய ஆபத்து வயிற்றிலே வைத்துப் பாதுகாத்து, உள்ளே கிடந்து நோவுபடாதபடி புறப்படவிட்டு, எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, எல்லாவிதமான பாதுகாத்தலையும் செய்தாய் அல்லையோ!’ என்றபடி. என்கொலோ முடிகின்றது இவட்கே - 1‘இவள் அளவில் தர்மிலோபமேயோ பலிக்கப் புகுகிறது? 2நீர் பாதுகாக்கும் பூமிக்கும் இவளுக்கும் ஒரு வாசி உண்டாக நினைத்திருக்கின்றிலீரோ! இவளுடைய பாபமோ, உம்முடைய திருவருளோ பலிக்கப் போகிறது? இவள் இடையட்டத்தில் நீர் செய்யப் பார்த்தபடி எங்ஙனே?’ என்னுதல். 3‘இவளுடைய நிலை என்னாய் விளையக்கடவது?’ என்னுதல்.

(2)

                676

        வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
             வானமே நோக்குமை யாக்கும்
        ‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
             ஒருவனே!’ என்னும்உள் ளுருகும்;
        ‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
             காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
        திட்கொடி மதிள்சூழ் திருவரங் கத்தாய்’
             இவள்திறத் தென்செய்திட் டாயே?

   
பொ - ரை :- ‘சிறிதும் நாணம் இல்லாதவளாய் இருக்கின்றாள்; ‘மணிவண்ணா!’ என்கிறாள்; ஆகாசத்தையே நோக்குவாள்; மயங்குவாள்; ‘அச்சத்தை உண்டாக்குகிற அசுரர்களுடைய உயிர்களை உண்ட ஒருவனே!’ என்பாள்; மனம் உருகுவாள்; ‘கண்களால் காண்பதற்கு அரிய நீ, நான் பார்ப்பதற்குத் திருவருள் புரியவேண்டும்,’

________________________________________________

1. ‘உருகும்’ என்றதனைக் கடாட்சித்து, ‘கொலோ’ என்றதற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார், ‘இவள் அளவில்’ என்று தொடங்கி.

2. ‘இவட்கு’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘நீர் பாதுகாக்கும்’ என்று
  தொடங்கி. 

3. ‘முன் செய்த வினை’ என்றதனையும் ‘முகில்வண்ணா’ என்றதனையும்
  கடாட்சித்து, ‘ே்காலோ; என்றதற்கு வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘இவளுடைய’ என்று தொடங்கி.