என
இரண்டாந்திருவாய்மொழி - பா.
3 |
65 |
என்பாள்; ‘ஸ்ரீராமபிரானே!
கண்ணபிரானே!’ என்பாள்; ‘திண்ணிய கொடிகள் கட்டிய மதில்கள் சூழ்ந்த திருவரங்கத்தாய்! இவள்
விஷயத்தில் என்ன செய்தாய்?’ என்கிறாள்.
வி - கு :
வட்கு - நாணம். இறை - சிறிது. உட்கு - அச்சம்; ‘உருவுட் காகும் புரையுயர் பாகும்,’ என்பது தொல்காப்பியம்.’
திண்’ என்பதனை, மதிட்கு அடைமொழியாக்கலுமாம்.
ஈடு:
மூன்றாம் பாட்டு. 1‘இவள் இந்த நிலையை அடைந்தவளாதற்கு இவள் விஷயத்தில் நீர்
செய்தது என்?’ என்கிறாள்.
வட்கு இலள் இறையும்
- இதற்குச் சீயர் அருளிச்செய்வது. ‘இவள் முடிந்தாள்’ என்று. 2நாணத்தைக்கொண்டே
அன்றோ பெண்மையை அறிவது? சொரூபத்தைப் பற்றி வரும் குணம் போனால் சொரூபமும் போயிற்றாமத்தனை
அன்றோ? 3நிரூபகத்தை ஒழிய நிரூபிக்கப்படும் பொருளின் சித்தி இல்லையே! இவள்
நாணம் நீங்கினமைக்கு அறிகுறி என்?’ என்னில், மணிவண்ணா என்னும் - 4கணவனுடைய திருப்பெயரைச்
சொல்லாநின்றாள். 5பெற்ற தாய் முன்னே வடிவழகினைச் சொல்லாநின்றாள். 6நான்
கேட்டாலும் மறைக்குமதனைத்தான் வெளியிடாநின்றாள். 7காதலி ஆசைப்படுவது வடிவழகினை
அன்றோ? தான் அகப்பட்ட துறையினைச்
_________________________________________________________________
1. திருப்பாசுரம் முழுதினையும்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘முடிந்தான்’ என்கிறது,
என்கொண்டு?’ என்ன, ‘நாணத்தை’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார். அதனை விவரணம்
செய்கிறார், ‘சொரூபத்தை’
என்று தொடங்கி.
3. ‘குணம் போனால் சொரூபமும்
போயிற்றாம் என்பது யாங்ஙனம்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘நிரூபகத்தை’ என்று
தொடங்கி.
4. ‘மணிவண்ணா’ என்றதனை
இடுகுறிப்பெயராகக் கொண்டு பாவம் அருளிச்செய்கிறார்,
‘கணவனுடைய’ என்று தொடங்கி.
5. அதனைக் காரணப் பெயராகக்
கொண்டு பாவம் அருளிச்செய்கிறார், ‘பெற்ற தாய்’
என்று தொடங்கி.
6. ‘பெற்ற தாய் முன்னே
சொல்ல ஒண்ணதோ?’ என்ன, ‘நான் கேட்டாலும்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
7. ‘சொரூப
ரூப குணங்கள் இருக்க, வடிவழகினைச் சொல்லுவான் என்?’ என்ன, ‘காதலி’
என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். அதனை விவரணம் செய்கிறார்,
‘தான் அகப்பட்ட’ என்று தொடங்கி.
|