New Page 1
66 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
சொல்லாநின்றாள்.
1மெய்யே நினைத்து, மெய்யே சொல்லி, மெய்யே அனுபவிக்கை இவர்க்குத் தன்மையாய்விட்டதே!
‘உன் சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு,’ என்று அவன்பாடு
இவள் வேண்டிக்கொள்வதும் இதுவே அன்றோ? மணிவண்ணா என்னும் - 2வடிவழகினைச்
சொல்லுதல், சௌலப்பியத்தினைச் சொல்லுதலாகாநின்றாள். 3‘இதற்கு முன் அறியாத
துக்கத்தையுடையவளும் மென்மைக்குணமுடையவளும் ஆழ்ந்த மனமுடையவளுமான பிராட்டி, அந்தத் துக்கத்தாலே
அழுது கொண்டு என்னைப்பார்த்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை,’ என்கிறபடியே, எல்லா நிலைகளிலும்
வாய்விடக்கூடியதன்றிக்கே இருப்பது ஒன்றே அன்றோ இது? வானமே நோக்கும் - 4‘மணிவண்ணா’
என்னும் துயர ஒலி கேட்டிருப்பதற்குச் சத்தன் அல்லன், ஒலி வழியே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து
தோன்றினாற் போலே தோன்றியருள்வான் என்று ஆகாயத்தையே பாரா
_______________________________________________________________
1. ‘தான் அகப்பட்ட துறை
இதுதான் என்பதற்கு காரணம் யாது?’ என்ன, அதற்குப்
பிரமாணங்காட்டுவாராகத் திருவுள்ளம் பற்றி
அவதாரிகை அருளிச்செய்கிறார்,
‘மெய்யே’ என்று தொடங்கி. மெய்-உண்மையும், சரீரமும். ‘உன்
சின்னமும்’
என்பது, திருவாய். 7.1:8.
2. ‘மணிவண்ணா’ என்பதற்குப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘வடிவழகினை’ என்று
தொடங்கி. ‘வண்ணம்’ என்பதற்கு அ.கு என்றும்.,
சௌலப்யம் என்றும்
பொருள்கொண்டு, இரண்டனையும் அருளிச்செய்தபடி மணிவண்ணன் -
மணியினது தன்மையுடையவன்.
3. ‘தான் கேட்டாலும்
மறைக்கும்படி வடிவழகு வாய்விடக் கூவுவது அன்றோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இதற்கு முன்’ என்று தொடங்கி.
‘அத்ருஷ்ட பூர்வவ்யஸநா
ம்ருதுஸூலா மநஸ்விநீ
தேந துக்கேந ருததீ நைவம்
ஆகிஞ்சித் அப்ரவீத்’
என்பது, ஸ்ரீராமா. அயோத். 58:35.
இது, தசரத சக்கரவர்த்தியைப் பார்த்துச் சுமந்திரன்
கூறியது. ‘இது’ என்றது, வடிவழகினை; அன்றி,
நாணத்தையுமாம்.
4. ‘‘மணிவண்ணா’
என்றதும் வாராதிருக்கவும், வானத்தை நோக்குவது என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘மணிவண்ணா’ என்று தொடங்கி.
|