முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

இரண்டாந்திருவாய்மொழி - பா. 3

69

கொடுத்துக் காட்டிற்றிலையோ? கட்கிலீ - ‘கண்ணுக்கு இலீ!’ என்றபடி. உன்னைக் காணுமாறு அருளாய் - 1‘உன்னைக் காண அரிது தம் முயற்சியாலே பெற இருப்பாற்கே அன்றோ? உன் அருள் அடியாகக் காண்பார்க்கும் அரிதோ?’ நன்று; அருளாலே நாம் யார்க்குக் காட்டினோம்?’ என்ன, காகுத்தா - 2‘வடிவு உதாரத்தன்மை சீலம் ஆகியவற்றால் அனைவருடைய கண்களையும் மனத்தையுங் கவரக்கூடியவனை’ என்கிறபடியே, நகரத்திலுள்ளவர்களுக்கும், 3‘பெருமாளுடைய உருவத்தின் அமைப்பையும் அழகினையும் சுகுமாரத் தன்மையையும் அழகிய அலங்காரத்தையும் வனத்தில் வசிக்கின்ற முனிவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்,’ என்கிறபடியே காட்டில் வசிப்பவர்களுக்கும் காட்டிக்கொடுத்திரிந்திலையோ?

    ‘ஒருகால் செய்தது கொண்டோ?’ என்ன, கண்ணனே - ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்களுக்கு உன்னைக் காட்டிற்றிலையோ? 4‘தாஸாம் ஆவிரபூத் - ஒரு நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே இருக்கை. ஸ்மயமாநமுகாம்புஜ:- அவர்கள் முன்னே தோன்றின பின்பு வடிவில் பிறந்த செவ்வி. பீதாம்பரதர: ஸ்ரக்வீ -பெண்கள் மனத்தில் மறத்தை மாற்றுவது, பரிவட்ட வாய்ப்பையும் தோள்களில் மாலையையும் காட்டியாயிற்று. ஸாக்ஷாத் மந்மத மந்மத :- 5காமன் கையிலே உலகம் படுமதனைக் காமன் தான் படும்படி

__________________________________________________________________

1. மேலே கூறிய இரண்டு வகையான பொருள்களையும் நாயகியின் பாவத்தாலே
  அருளிச்செய்கிறார், ‘உன்னைக் காண’ என்று தொடங்கி.

2.     ‘சந்த்ரகாந்தாநநம் ராமமதீவ ப்ரியதர்ஸநம்
     ரூப ஒளதார்யகுணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்’

என்பது, ஸ்ரீராமா, அயோத். 3:29.

    ‘ரூபம் ஸம்ஹநநம் லக்ஷ்மீம் ஸௌகுமார்யம் ஸூவேஷதாம்
     தத்ரஸூ: விஸ்மித ஆகாரா ராமஸ்ய வநவாஹிந;

என்பது, ஸ்ரீராமா. ஆரண், 1 : 1.

4. பெண்களுக்குக் காட்டியத்திற்குப் பிரமாணமும், பிரமாண சுலோகத்திற்குப்
  பொருளும் அருளிச்செய்கிறார், ‘தாஸாம்’ என்று தொடங்கி.

        ‘தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமாக முகாம்புஜ:
        பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத;’

என்பது, பாகவதம், 10. 32:2.

5.  ‘வாராக வாமன னேயரங் காவட்ட நேமிவல
    வாராக வாஉன் வடிவுகண் டால்மன் மதனும்மட
    வாராக ஆதரம் செய்வன்என் றால்உய்யும் வண்ணமெங்கே
    வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே?’

என்பது, திருவரங்கத்தந்தாதி.