677
இரண்டாந்திருவாய்மொழி - பா.
4 |
71 |
677
இட்டகால் இட்ட
1கையளாய் இருக்கும்;
எழுந்துலாய்
மயங்குங்கை கூப்பும்;
‘கட்டமே காதல்’
என்றுமூர்ச் சிக்கும்;
‘கடல்வண்ணா!
கடியைகாண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி
வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’
என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த்
திருவரங் கத்தாய்!
இவள்திறத்
தென்சிந்தத் தாயே?
பொ-ரை :
‘இட்டு வைத்த இடத்தே கிடக்கும்படியான கைகளையும் கால்களையுமுடையவளாய் இருப்பாள்; எழுந்து உலாவுவாள்;
மயங்குவாள்; கைகூப்பித் தொழுவாள்; ‘அன்பு துன்பத்தையே உண்டாக்குகின்றது,’ என்று மூர்ச்சிப்பாள்;
‘கடல்வண்ணா! நீ கொடியவன்காண்,’ என்பாள்; ‘வட்டமான கூர்மை பொருந்திய சக்கரத்தை வலக்கையிலுடையவனே!’
என்பாள்; ‘வந்திடாய்’ என்று என்றே மயங்குவாள்; ‘சிஷ்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் விஷயமாக நீ சிந்தித்தது யாது?’ என்கிறாள்.
வி-கு :
கட்டம்-கஷ்டம். உலாய் மயங்கும்-உலாவி மயங்குவாள் எனலுமாம். சிட்டன்-சிஷ்டன்.
ஈடு :
நான்காம் பாட்டு. 2உம்மை ஒழியப் பிழைக்க
மாட்டாத இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்கிறாள்.
இட்ட கால் இட்ட
கையளாய் இருக்கும் - 3இவளுக்கு நீர் உடம்பு கொடுக்க வேண்டா; இவள் அவயவங்கள்
இவள் அதீனமாகச் செய்ய அமையும். 4‘தோழிகளால் போகடப்பட்டுப் பரந்து
_________________________________________________
1. ‘இட்ட கைகளாய்’ என்பதும்,
‘எழுந்துலா மயங்கும்’ என்பதும் பாடம்.
2. ‘இவள் திறத்து என் சிந்தித்தாய்?’
என்பதனைக் கடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
3. ‘இட்ட கால் இட்ட கையளாயிருக்கும்’
என்கிற தாயாருடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார், ‘இவளுக்கு’ என்று தொடங்கி.
4. யாராலே இட்ட கால்,
இட்ட கை என்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார்,
‘தோழிகளால்’ என்று தொடங்கி.
‘ஸகீபி: ந்யஸ்த
ப்ரகீர்ண பரதந்த்ர விபாண்டுர அங்கீ’ என்பது.
|