வட
|
இரண்டாந்திருவாய்மொழி - பா.
4 |
73 |
வட்டம் வாய் நேமி வலக்சையா
என்னும் - 1‘சங்கு சக்கரங்கள்’ என்று சொல்லும் நிலையும் போயிற்று, 2இப்போது
கண்களுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச்செய்தேயும், அவற்றினுடைய அமைப்பு, புத்தியிற்படிந்ததாய்
இருக்கிறபடி. பிடித்த இடம் எங்கும் வாயாக இருத்தலின், ‘வட்டவாய்’ என்கிறது. இதனால்,
‘விரோதியைப் போக்கப் பரிகரம் இன்றிக்கே இருக்கிறாய் அன்றே?’ என்கிறாள் என்றபடி.
வந்திடாய் என்று
என்றே மயங்கும் - 3ஒருகால் ‘வந்திடாய்’ என்றால் ஆறி இருக்க வல்லள் அல்லளே.
விடாய்த்தவன் தாகம் தீருநதனையும் ‘தண்ணீர்’ என்னும் இத்தனையன்றோ? அப்படியே, ‘வந்திடாய்,
வந்திடாய்’ என்று உருவ அதனையே சொல்லும்; மற்று ஒன்று அறியாள். 4வாசனையே உபாத்தியாயராகச்
சொல்லுமத்தனை. 5வெண்கலத்தின் ஒலி போலே சொல்லுக்குச் சொல் ஓய்ந்து வருகின்றதாதலின்,
‘என்றென்றே’ என்கிறது. 6சிட்டன்-திருமால். என்றது, ‘பிராட்டி விஷயத்தில்
வியாமோகத்தையுடையவன்’ என்றபடி. அன்றிக்கே, ‘பிராட்டியைத் தன் பக்கலிலே பித்தாக்கித்
துடிக்கப்பண்ணுமவன்’ என்னுதல். அன்றிக்கே, 7உம்முடைய படி சால அழகிதாய் இருந்தது;
உம்மைப்போலே சிஷ்டர்கள்
___________________________________________________________________
1. ‘நேமி’ என்று ஒன்றதனை
மட்டும் சொன்னதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘சங்கு’
என்று தொடங்கி.
2. ‘காணாதிருக்க, ‘வட்டவாய்’
என்று அறியும்படி என்?’ என்ன, ‘இப்போது’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
3. ‘என்றென்றே’ என்ற
அடுக்குத் தொடருக்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘ஒருகால்’
என்று தொடங்கி.
4. ‘மயங்கினால் ‘வந்திடாய்’
என்னக் கூடுமோ?’ என்ன, ‘வாசனையே’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
5. ‘என்றே’ என்ற ஏகாரத்துக்குத்
தாளகதியில் பாவம் அருளிச்செய்கிறார்,
‘வெண்கலத்தின்’ என்று தொடங்கி. இரண்டாம் பத்து
ஈட்டின் தமிழாக்கம்.
பக். 92 பார்க்க.
6. சிட்டன்: ஸ்ரீக்கு இஷ்டன்
சிட்டன் என்று கொண்டு ‘திருமால்’ என்கிறார்.
7. ‘சிஷ்டன்’
என்று கொண்டு, வெறுப்பிலேயாக்கி, வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார், ‘உம்முடைய படி’ என்று
தொடங்கி. ‘அழகிதாய் இருந்தது’
என்றதனை விவரணம் செய்கிறார், ‘உம்மைப் போலே’ என்று தொடங்கி.
|