678
இரண்டாந்திருவாய்மொழி - பா.
5 |
75 |
678
சிந்திக்கும் திசைக்கும்
தேறும்கை கூப்பும்
‘திருவரங் கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே
மழைக்கணீர் மல்க
‘வந்திடாய்’
என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ
தவுணன் உடலிடந் தானே!
அலைகடல்
கடைந்தஆர் அமுதே!
சந்தித்துன்
சரணம் சார்வதே வலித்த
தையலை மையல்செய்
தானே!
பொ - ரை : ‘அந்தி நேரத்தில் இரணியனது சரீரத்தைப்
பிளந்தவனே! அலைகளையுடைய கடலைக் கடைந்த அரிய அமுதே! சேர்ந்து உனது திருவடிகளை அடைவதற்கே
உறுதிகொண்ட இந்தப் பெண்ணை மயங்கும்படி செய்தவனே! சிந்திப்பாள்; அறிவு கெடுவாள்; தெளிவாள்;
கைகூப்பித் தொழுவாள்; ‘திருவரங்கத்தில் உள்ளவனே!; என்பாள்; தலையாலே வணங்குவாள்; அவ்விடத்திலேயே
மழை போன்று தண்ணீர் பெருகும்படி ‘வந்திடாய்’ என்று என்று கூவிக் கொண்டே மயங்குவாள்,’ என்கிறாள்.
ஈடு : ஐந்தாம்
பாட்டு. 1இவளுக்கு ஒவ்வொரு கணத்திலும் மாறபட்டு ஒன்றோடு ஒன்று சேராதே வருகிற நிலை
வேறுபாடுகளை அறிவித்து, ‘இவளை இப்படிப் படுத்துதல் உம்முடைய நீர்மைக்குப் போருமோ?’ என்கிறாள்.
சிந்திக்கும் -
உம்முடைய அழகு முதலானவற்றையும் உம்முடைய கலவியையும் நினைக்கும். 2முன்பு இந்த நினைவும்
இன்றிக்கேயாயிற்றிருந்தது; மோகத்தைப் போன்று இதுவும் ஒரு வேறுபாடாய் இருக்கிறபடி. திசைக்கும்-அப்போதே
காணப்பெறாமையாலே மோஹிக்கும், தேறும் - ஒரு காரணம் இன்றிக்கே இருக்கத் தெளிகின்றாள்.
3இதுதானும் அச்சத்தைத் தருமதாய் இருக்கிறதாயிற்று; மோஹம் செல்லாநிற்க,
விரும்பினதைப் பெற்றாரைப்
________________________________________________
1. திருப்பாசுரம் முழுதினையும்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘இந்த நினைவு ஒவ்வொரு
கணமும் மாறிக்கொண்டே வருகின்றதோ?’
என்ன, ‘முன்பு’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
இப்போது ‘சிந்திக்கும்’ என்கையாலே, முன்பு மோஹம் சித்தம்.
3. ‘தேறுகை நல்லது அன்றோ?’ என்ன, ‘இதுதானும்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
|