New Page 1
76 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
போலே தெளிதல் அச்சங்கொடுக்கும்
அன்றோ? முடிவு காலத்தில் பிறக்கும் தெளிவிற்குமு அஞ்சவேணுமே? 1உய்ந்த
பிள்ளை பாடும் போது, ‘கெட்டேன், இவள் ‘தேறும்’ என்பதே’ என்று சீயர்
அருளிச்செய்வராம். கைகூப்பும்-இது இவளுக்கு இயல்பு. 2மேலே ‘மயங்கும் கைகூப்பும்’
என்றது; இங்கே ‘தேறும் கைகூப்பும்’ என்றது: அல்லாதவை திரிதலாய்ச் செல்லாநிற்க, இது ஒன்றும்
நிலையாய்ச் செல்லாநிற்கும்; சொரூபத்தோடு சேர்ந்தது ஆகையாலே. 3‘எப்பொழுதும்
கைகூப்பிக்கொண்டே இருப்பவர்கள்’ என்னக் கடவதன்றோ? 4மோஹத்திலும் உணர்த்தியிலும்
சத்தை உண்டே; 5‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்பதன்றோ நிலை நின்ற
சொரூபம்? 6தொடர்ந்திருப்பது ஆனதன்றோ உண்மையானது? திருவரங்கத்துள்ளாய் என்னும்-
‘பெருமாளே என்னும்’ என்று சீயர் பணிப்பர். 7அவ்வூரில் சம்பந்தம் கொண்டு
போலேகாணும் அவரையும் விரும்பிற்று. வந்திக்கும் - ‘திருவரங்கத்துள்ளாய்’ என்றது, நெஞ்சிலே
8வடிம்பிட்டு, ‘ஒருமுகமே, முறுவலே, ஒருவளையமே’ என்று துதிக்கின்றாள் என்னுதல்; அன்றிக்கே,
அபிமானம் நீங்கினவளாய்த் திருவடிகளிலே விழுந்து கிடக்கும்’
______________________________________________________________
1. தெளிதல் அச்சத்திற்குக்
காரணம் என்பதற்கு ஜதிஹ்யம் காட்டுகிறார், ‘உய்ந்த
பிள்ளை’ என்று தொடங்கி.
2. இது இவளுக்கு இயல்பானபடியை
அருளிச்செய்கிறார், ‘மேலே’ என்று தொடங்கி.
‘இது ஒன்றும்’ என்றது, அஞ்சலியை.
3. சொரூபத்தோடு சேர்ந்ததாகையாலே
அஞ்சலி நித்தியம் என்னுமதற்குப் பிரமாணம்
காட்டுகிறார், ‘எப்பொழுதும்’ என்று தொடங்கி.
‘நித்யாஞ்ஜலிபுடா:? என்பது,
பாரதம்., மோக்ஷதர்மம்.
4. இதற்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார், ‘மோஹத்திலும்’ என்று தொடங்கி.
5. ‘அதனால் பயன் யாது?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘வழுவிலா’
என்று தொடங்கி. இது, திருவாய். 3. 3:1.
என்றது, சத்தையுண்டான போது அதன்
காரியமான அஞ்சலியும் நித்தியமாய்ச் செல்லும் என்றபடி.
6. மோஹமும் உணர்த்தியும்
திரிவுபட்டவை; அஞ்சலி நித்தியமாயுள்ளது என்னுமதனை
விவரிக்கிறார், ‘தொடந்திருப்பானது’ என்று
தொடங்கி.
7. ‘‘பெருமாளே’ என்பது
பொருளானால், ‘திருவரங்கத்துள்ளாய்’ என்ன, வேண்டுமோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அவ்வூரில்’ என்று தொடங்கி.
8. வடிம்பிடுதல்
- தூண்டுதல்.
|