முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

உன

78

திருவாய்மொழி - ஏழாம் பத்து

உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே - 1‘உன்னைக் கிட்டித் திருவடிகளைச் சாரவேணும் என்று அறுதியிட்டவளாயிருக்கிற இவளை இப்படி அறிவுகெடுப்பதே! அன்றிக்கே, உன்னைக் கிட்டிச் சந்நிதியிலே முடியுமித்தனை என்று உயிரைத் தரித்திருக்கிறவளை இப்படி அறிவு கெடுப்பதே!’ என்னுதல். 2‘என்னை அழைத்துக்கொண்டு போவதற்குறிய முயற்சியை எத்துணைக் காலத்திற்குள் கேட்பேனோ அத்துணைக்காலம் வரை பிழைத்திருப்பேன்’ என்று காணும் இருக்கிறது. ‘உம்மை ஆசைப்பட்டவளுக்கும் மயக்கமேயோ பலித்துவிட்டது?’ என்பாள், ‘மையல் செய்தானே’ என்கிறாள்.

(5)

                679 

        ‘மையல்செய்து என்னை மனங்கவர்ந் தானே!
             என்னம்’மா மாயனே!’ என்னும்;
        ‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல்சூழ்
             திருவரங் கத்துள்ளாய்!’ என்னும்;
        ‘வெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில்
             ஏந்தும்விண் ணோர்முதல்!’ என்னும்;
        பைகொள்பாம் பணையாய்! இவள் திறத் தருளாய்
             பாவியேன் செயற்பா லதுவே.


   
பொ - ரை : ‘மயக்கத்தைச் செய்து என்னுடைய மனத்தைக் கொள்ளை கொண்டவனே!’ என்பாள்; ‘மாமாயனே!’ என்பாள்; ‘சிவந்த திருவதரத்தையுடைய மாணிக்கமே!’ என்பாள்; குளிர்ந்த

__________________________________________________

1. ‘உன் சரணம் சார்வதே’ என்பதற்கு அருளிச்செய்த இருவகைப் பொருள்களில்,
  முதற்பொருளில் கலவியைக் குறித்தது, இரண்டாவது பொருளில்
  முடிதலைக் குறித்தது.

2.    ‘தாவத்த்யஹம் தூத ஜிஜீவிஷேயம்
    யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய’

என்பது, ஸ்ரீராமா. சுந். 36:30.

    ‘திங்கள் ஒன்றின்என் செய்தவம் தீர்ந்ததால்
    இங்கு வந்தில னேஎனின் யாணர்நீர்க்
    கங்கை யாற்றங் கரைஅடி யேற்குந்தன்
    செங்கை யாற்கடன் செய்கென்று செப்புவாய்.’

என்பது கம்பராமாயணம்.