முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1

80

திருவாய்மொழி - ஏழாம் பத்து

1‘கலக்கிற சமயத்தில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்த பரிமாற்றங்காணும் இவள் மனத்தில் பட்டுக் கிடக்கிறது’ என்றபடி. ‘இயல்பாயுள்ள மேன்மை போன்றதன்றே, காதலால் தாழ நின்ற நிலை’ கலவிக் காலத்தில் ஆச்சரியமான செயல்களையுடையவனே!’ என்னும். செய்ய வாய்- இதுவும் அந்த மாயங்களிலே ஒன்று. தைரியக் குறைவு உண்டாய் ‘நான் உன் சரக்கு அன்றோ?’ என்று சொல்லுகிற போதை அதரத்தில் பழுப்பு இருக்கிறபடி. 3‘அழகிய முறுவலையுடைய முகத்தாமரையைத் தரித்தவனை’ என்னக்கடவதன்றோ? மணியே-புஷ்பம் மலருகிற போது எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறக்குமாறு போலே, புன் முறுவல் செய்யும்போது வடிவிலே எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறந்தபடி. தண்புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்-புன்முறுவலில் உண்டாகும் குளிர்த்தியைப் போலாயிற்று ஊரில் குளிர்த்தியும். அகவாயில் குளிர்த்தி போலேயாயிற்று இவ்வாயில் குளிர்த்தியும்.

    வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்- 3திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை? 4முன்னே கைகண்டு வைக்கிறவை அன்றோ? காணவே பகைவர்கள் மண்ணுண்ணும்படியான திவ்ய ஆயுதங்களைத் தரித்திருக்கிற நீ என் விரோதிகளைப் போக்கி முகங்காட்டாது

__________________________________________________________________

1.    ‘மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
    நினையுங் காலைப் புலவியுள் உரிய’

என்பது, இலக்கணம். (தொல். பொருள்.)

2. ‘புன்முறுவல் செய்யும் போது உண்டாகிற சிவப்பு’ என்று வேறும் ஒரு பொருள்
  அருளிச்செய்கிறார், ‘அழகிய’ என்று தொடங்கி. ‘ஸவிலாஸ ஸ்மிதாதாரம்’ என்பது,
  ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 17:21.

3. காதலி திவ்விய ஆயுதங்களைச் சொல்லுவதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
  ‘திவ்ய ஆயுதங்கள்’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்,
  ‘உகப்பாரையும்’ என்று தொடங்கி. என்றது, ‘மேன்மையாலும் அழகாலும்
  இருவரையும் அழிக்கும்’ என்றபடி.

4. ‘இவற்றில் ஈடுபடுகைக்கு இவள் இவற்றை அறிந்தபடி யாங்ஙனம்?’ என்ன,
  ‘முன்னே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். கைகண்டு
  வைக்கிறவை, அனுபவித்தவை என்பதும், கையிலே கண்டு வைத்தவை என்பதும்
  பொருள்.