இதற
82 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
இதற்கு அடி நான் செய்த
பாபம் அன்றோ? 1‘என் பாபமே இந்த விஷயத்தில் காரணம் ஆயிற்று’ என்னமாறு
போலே, செயற்பாலது - என்னுடைய செயலிடத்தது அருளாமைக்கு அடி; என்றது, ‘இவள் பக்கலிலும் குறை
இல்லை; உம்முடைய பக்கலிலும் குறை இல்லை; இருவருமான சேர்த்தியைக் காண இருக்கிற என் பாபம்
அன்றோ இதற்குக் காரணம்?’ என்றபடி.
(6)
680
‘பாலதுன் பங்கள்
இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார்
பற்றநின் றானே!
காலசக் கரத்தாய்!
கடலிடங் கொண்ட
கடல்வண்ணா!
கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண்
புனல்சூழ் திருவரங் கத்தாய்!’
என்னும்’என்
தீர்த்தனே!’ என்னும்;
கோலமா மழைக்கண்
பனிமல்க இருக்கும்
என்னுடையக்
கோமளக் கொழுந்தே.
பொ - ரை :
‘என்னுடைய அழகிய கொழுந்து போன்ற பெண்ணானவள், ‘பகுதிப்பட்ட துன்பங்களையும் இன்பங்களையும்
படைத்தவனே!’ என்பாள்; ‘ பற்று இல்லாத பரம ஞானிகள் பற்றும்படி நின்றவனே!’ என்பாள்; ‘கால
சக்கரத்தையுடைவனே!’ என்பாள்; ‘திருப்பாற்கடலை இடமாகக் கொண்ட கடல் வண்ணனே!’ என்பாள்;
‘கண்ணனே!’ என்பாள்; ‘சேல் மீன்கள் தங்கியிருக்கின்ற குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில்
எழுந்தருளியிருப்பவனே!’ என்பாள்; ‘என்னுடைய தீர்த்தனே!’ என்பாள்; அழகிய பெரிய குளிர்ந்த
கண்களில் நீர் மிகும்படி இருப்பாள்,’ என்கிறாள்.
வி - கு :
பால் - பகுதி; இடமுமாம், தீர்த்தன் - பரிசுத்தான்; பாவத்தைத் தீர்க்கின்றவனுமாம்.
‘தீர்தலும் தீர்த்தலும் விடற்
_________________________________________________
1. இதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘என் பாபமே’ என்று தொடங்கி.
‘மத்பாபமேவாத்ர நிமித்தம்
ஆஸீத்’
என்பது, ஸ்ரீராமா, அயோத். இது,
ஸ்ரீபரதாழ்வான் கூற்று.
‘கொன்றே னான்என்
தந்தையை மற்றுள் கொலைவாயால்
ஒன்றோ கானத் தண்ணலை
உய்த்தேன் உலகாள்வான்
நின்றேன் என்றால்
நின்பிழை யுண்டோ பழிஉண்டோ?
என்றே னுந்தான் என்புகழ்
மாயு மிடமுண்டோ?’
என்பது, கம்பராமாயணம்.
|