முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

86

திருவாய்மொழி - ஏழாம் பத்து

தருளினார் அன்றோ?’ என்கிறபடியே, அந்தக் கிடையை விட்டு இடையிலே வந்து உதவினாய் அன்றோ? அது தப்பிற்றே?’ என்ன, ‘அந்த அவதாரம் பரத்துவம் என்னும்படி அன்றோ கோயிலிலே வந்து சாய்ந்தருளிற்று?’ என்கிறாள் மேல்: சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் - 1‘தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன்கள் போன்றவர் அன்றோ?’ என்றது, ‘தண்ணீரில் சஞ்சரிக்கின்ற மீன் முதலான பொருள்கள் தண்ணீரைப் பிரிந்து தரிக்கில் அன்றோ இவள் உம்மைப் பிரிந்து தரிக்கவல்லளாவது?’ என்றபடி. 2‘அந்த ஊரில் வசிக்கிற உமக்குத் தக்கதாமோ இவளுக்கு முகங்காட்டாது ஒழிகிற இடம்?’ என் 3தீர்த்தனே என்னும் - ‘நீ உபேக்ஷித்தாலும் உன்னை ஒழிய எனக்குச் சொல்லாதபடி செய்தவனே!’ என்கிறாள் என்னுதல், அன்றிக்கே, ‘நான் இழிந்தாடும் துறை’ என்னுதல்.

    கோலம் மா மலர்க்கண் பனிமல்க இருக்கும் - காட்சிக்கு இனியானவாய்ப் பரந்து. சிரமஹரமான கண்கள் நீர் மல்க இராநின்றாள். கண்ணும் கண்ணநீருமான அழகு, காட்டில் எறித்த நிலா ஆவதே! 4இக்கண்ண நீருக்குச் சாதனத்தைச் செய்து பல வேளையிலே இழப்பதே! என்னுடையக் கோமளக்கொழுந்து - கலக்கப் பொறாத மிருதுத் தன்மையையுடைவள் பிரியப் பொறுக்குமோ? 5‘தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக்

____________________________________________________________________

1. ‘சேல்கொள் தண்புனல் சூழ்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘தண்ணீரினின்றும்’ என்று தொடங்கி. ‘ஜலாத் மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ’ என்பது,
  ஸ்ரீராமா. அயோத். 53:31.

2. ‘திருவரங்கத்தாய்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘அந்த ஊரில்’ என்று
  தொடங்கி.

3. ‘தீர்த்தனே’ என்பதற்கு இரு வகைப்பொருள்: முதற்பொருள், பரிசுத்தத்ததிலே நோக்கு;
  இரண்டாவது, சௌலப்யத்திலே நோக்கு. ‘அவனுக்கே அற்றுத் தீரச் செய்தவன்’
  என்பது முதற்பொருள். ‘இழிந்தாடும் துறை போன்று சுலபனானவனே’ என்பது
  இரண்டாவது பொருள்.

4. ‘தண்புனல் சூழ் திருவரங்கத்தாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இக்கண்ணநீருக்கு’
  என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

5. மேற்பாசுரங்களில் ‘திருவரங்கத்தாய்’ என்று அவனை விளித்துக் கூறியதுபோன்று
  கூறாமல், ‘இருக்கும் என்னடையக் கோமளக்கொழுந்து’ என்று கூறியதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘தசைமுறுகினால்’ என்று தொடங்கி.