எ
88 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
எழுந்து நின்று மேல் நோக்கிக்
கண்களை இமைக்காதவளாகி இருப்பாள்; ‘எந்த வகையால் உன்னைக் காண்பேன்?’ என்பாள்; செழுந்தடம்
புனல் சூழ்ந்த திருவரங்கத்தாய்! என் திருமகள் விஷயமாக என்செய்வேன் நான்’ என்கிறாள்.
ஈடு : எட்டாம்
பாட்டு. 1‘இவளுக்கு மேன்மேலென வருகிற நோவுகள் தீர்க்கைக்கு நான் செய்வது என்?’
என்கிறாள்.
வானவர்கட்குக்
கொழுந்து என்னும் - ‘நித்தியசூரிகளுக்கும் 2தலையானவனே!’ என்னும். அன்றிக்கே,
அவர்கள் வேராகத் தான் கொழுந்தானவன் என்னுதல். குன்று ஏந்திக் குளிர்மழை காத்தவன் என்னும்
- 3‘வேறு உலகத்தில் பரிமாற்றம் தேடவேணுமோ? பசுக்களுக்கும் பசுவின் தன்மையரான
ஆயர்கட்கும் உதவினவன் அன்றோ? மேன்மை இல்லாமல் இழக்கிறேனோ, நீர்மை இல்லாமை இழக்கிறனோ?’
என்னும். அழும் - 4மலையைத் தரித்து ஒரு மழையைத் தடுத்த நீர். இந்த மழையைத்
தடுத்தல் ஆகாதோ?’ என்றது, ‘பல விதமாக இடைவிடாமல் துக்கங்களாகிய மழையைப் பெய்கிற என்கிற
இதனைத் தடுத்தல் ஆகாதோ?’ என்றபடி. அழும் - ‘பாலர் செய்யுமதனையும் செய்யும்’ என்னுதல். சினேகத்தையுடையவர்கள்
செய்யுமதனையும் என்னுதல். தொழும் - 5‘புகல் அற்றார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.
‘வேதாந்த ஞான
__________________________________________________________________
1. பாசுரம் முழுதினையும் கடாட்சித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. மரத்துக்குக் கொழுந்து
பிரதானமாகையாலே, ‘தலையானவனே’ என்கிறார்.
இரண்டாவது பொருளில், ‘அவர்கள் துக்கத்துக்குத்
தான் வருந்துகிறவன்’
என்பது பொருள்.
3. மேலே உள்ள தொடரையும் கூட்டிக்கொண்டு
பாவம் அருளிச்செய்கிறார், ‘வேறு
உலகத்தில்’ என்று தொடங்கி.
4. ‘குன்றேந்தி’ என்றதனையும்
கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார், ‘மலையைத் தரித்து’
என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்,
‘பல விதமாக’ என்று தொடங்கி.
‘பஹூதா ஸந்தத
துக்க வர்ஷிணி’
என்பது, ஸ்தோத்திரரத்நம், 49.
‘இந்திரன், சோனை
மாரி விலக்கி விட்டவர்
சொரிகண் மாரி விலக்கிலார்’
என்பது, திருவரங்கக் கலம்பகம்.
5. புகல் அற்றார் - பிரபத்தி நிஷ்டர். வேதாந்த ஞானமுடையார்-உபாசகர்.
|