முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அச

முதல் திருவாய்மொழி - முன்னுரை

9

அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையில் அம்புகள். ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம் - தங்களுடைய ஆபத்தை அறிந்து போக்கக் கூடியவனையும் பார்த்துப் பற்றினார்கள். 1‘அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வானரங்களுடைய பெரிய கூட்டமானது, பாதுகாக்கின்றவனும் சக்கரவர்த்தி திருமகனுமான பெருமாளைச் சரணமாக அடைந்தது,’ என்கிறபடியே, முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே, இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார். 2‘பிரியமான ஜனங்களைப் பாராதவளும், அரக்கியர்களின் கூட்டத்தைப் பார்ப்பவளும், தன் கூட்டத்தால் விடப்பட்டதும் நாய்க்கூட்டத்தால் சூழப்பட்டதுமான பெண் மான் போன்றிருப்பவளும்’ என்கிறபடியே, ஸ்ரீஜனகராஜன் திருமகள் பட்டது படுகிறார்.

______________________________________________________________________

  தொடங்கி. ‘’ஸாகா ம்ருகா:’ என்றால், இப்பொருள் படுமோ?’ என்ன, ‘பணையோடு’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘ராவண’ என்ற சொல்லுக்குப்
  பொருள், ‘திசைப்பாலகர்களையும்’ என்று தொடங்கும் வாக்கியம். ‘ஸமர்த்த:
  காருணிகோ ஹி ஸரண்ய: - சமர்த்தனாயும் கருணையுடையவனாயுமிருப்பவன்
  அன்றோ சரண்யன்?’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘ஸரண்யம்’ என்றதற்கு
  பாவம் அருளிச்செய்கிறார், ‘தங்களுடைய’ என்று தொடங்கி.

1. இரண்டாவது திருஷ்டாந்தம், ‘அரக்கர்களால்’ என்று தொடங்குவது.

        ‘ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
        ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’

என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.

2. மூன்றாவது திருஷ்டாந்தத்தை அருளிச்செய்கிறார், ‘பிரியமான’ என்று தொடங்கி.

        ‘ப்ரியம்ஜநம் அபஸ்யந்தீம் பஸ்யந்தீம் யராக்ஷஸீகணம்
        ஸ்வகணேந ம்குகீம் ஹீநாம் ஸ்வகணை; ஆவ்ருதாமிவ’

என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 24.

        ‘மயிலி யற்குயின் மழலையாள் மானினம் பேடை
        அயிலெ யிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்’

என்பது, கம்பரா. சுந். காட்சிப். 4.