முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

இரண்டாந்திருவாய்மொழி - பா. 9

91

    பொ-ரை : ‘என் திருமகள் சேர்ந்திருக்கின்ற மார்பையுடையவனே!’ என்பாள்; ‘என்னுடைய உயிரே!’ என்பாள்; ‘உன்னுடைய அழகிய தந்தத்தினாலே இடந்து எடுத்து உன் காதலுக்குரியவளாகக்கொண்ட பூமிப்பிராட்டிக்குக் கணவனே!’ என்பாள்; ‘கிருஷ்ணாவதாரத்தில் அஞ்சத்தக்க இடபங்கள் ஏழனையும் தழுவி உன் காதலுக்கு உரியவளாகக் கொண்ட நப்பின்னை பிராட்டிக்கு அன்பனே!’ என்பாள்; அழகிய திருவரங்கத்தைக் கோயிலாகக் கொண்டவனே! இவளுடைய துயரத்திற்கு முடிவு அறிகின்றிலேன்.

    வி - கு :
எயிறு - கோரப்பல், உரு - அச்சம்; அது இங்கு அச்சத்தை உண்டாக்குகின்ற இடபங்களுக்கு ஆயிற்று. தென் - தெற்குத் திசையுமாம்.

    ஈடு:
ஒன்பதாம் பாட்டு. 1‘இவள் துக்கத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்,’ என்கிறாள்.

    என் திருமகள் சேர் மார்பனே என்னும் - 2‘என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும். ‘என்’ என்பது திருமகளுக்கு அடைமொழி. மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது. 3அனந்தாழ்வான் தன் பெண்பிள்ளையை ‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான். பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீதனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும்; நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே ‘அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாகவேணும்,’ என்று வேண்டிக்கொண்டார், ‘சேர்மார்பன்’ என்பது, நிகழ்கால வினைத்தொகையாலே 4இரஹஸ்யத்தில் நித்திய யோகத்தைச் சொல்லுகிறது: என்றது, ‘அவள் ஒரு கணம் பிரிய

_____________________________________________________________________

1. ‘தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. பிராட்டியினுடைய சம்பந்தம் சொன்னதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘என்
  பேற்றுக்கு’ என்று தொடங்கி.

3. ‘என், என்பதனைத் திருவுக்கு அடைமொழி ஆக்கினதற்குச் சம்வாதம் காட்டுகிறார்,
  ‘அனந்தாழ்வான்’ என்று தொடங்கி. மற்றும் ஒரு சம்வாதம் காட்டுகிறார், பட்டர்’ என்று
  தொடங்கி. வேண்டிக்கொண்டார்’ என்றது ‘மாதர்லக்ஷ்மி’ என்ற சுலோகத்திலே
  வேண்டிக்கொண்டார் என்பது.

4. ‘இரஹஸ்யத்தில்’ என்றது, மந்திரரத்நமாகிய துவயத்தில் ‘ஸ்ரீமந் நாராயண’
  என்றதனைத் திருவுள்ளம் பற்றி.