முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

92

திருவாய்மொழி - ஏழாம் பத்து

இருக்கில் அன்றோ எனக்குப் பேறு தாழ்க்க வேண்டுவது?’ என்கிறாள் என்றபடி. 1‘பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது செய்யா நிற்கச்செய்தே இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே ‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச்செய்ய, அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச்செய்வர். ‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு, ‘இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச்செய்வார். 2இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று. ‘திருமகள் சேர் மார்பனாய்க்கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

    நின் திரு எயிற்றார் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும் -‘காதலிமார்கட்குக் காரியம் செய்யும் போது உன்னை அழிய மாறியன்றோ காரியம் செய்வது? ஸ்ரீ பூமிப்பிராட்டி பக்கல் முகம் பெறலாவது, 3அவள் விபூதியைத் தன் முகத்தால் நோக்கினால் அன்றோ 4‘நின் திரு எயிறு’ என்னும் இத்தனை அழகுக்கு? இடந்து நீ கொண்ட - நீ இடந்துகொண்ட ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவனே! அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் - ‘ஒரு நாள் உதவின நீ. இன்று

______________________________________________________________________

1. இவளுக்கு உயிர் மிதுநம் (இரண்டு): பிராட்டியுடன் கூடிய பெருமாள்’ என்று
  சொல்லப்படும் பொருளுக்குச் சம்வாதம் காட்டுகிறார், ‘பெருமாளுக்கு’ என்று
  தொடங்கி. ‘விண்ணப்பம் செய்யுமவை கேட்கைக்காக’ என்றது, சந்நிதியிலே கைசிக
  புராண சுலோகங்களுக்குப் பொருள் சொல்லுவதற்குத் தகுதியாகத் திருவாய்மொழியின்
  பாசுரங்களைத் திரட்டி எடுப்பதற்கு மூலம் கேட்கைக்காக என்றபடி.

2. ‘இப்படிச் சேர்த்ததனால் தோற்றின பொருள் யாது?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இவர்க்கு’ என்று தொடங்கி. ‘என் திருமகள் சேர் மார்பனே’
  என்று சொல்லப்படுகிற என் பிராணனே என்பது பொருள்.

3. அவள் விபூதியை-பூமியை. தன்முகத்தால் - தன்னுடைய முகத்தால் என்பதும், தான்
  பிரதாநமாக என்பதும் பொருள்.

4. ஒரு திருஷ்டாந்தம் கூறாமல், ‘திருஎயிறு’ என்று வாளா கூறியதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘நின் திரு எயிறு’ என்று தொடங்கி.