முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

பர

94

திருவாய்மொழி - ஏழாம் பத்து

பரியந்தமாக்கிக்கொண்டு நீ கிடந்தால், 1‘ஐயங்கள் எல்லாம் நீங்கி நிலைபெற்ற எண்ணமுடையவனானேன்’ என்று இருக்க அன்றோ அடுப்பது? அது மாட்டுகின்றிலேன். இவள்தனக்கு முடிவு தெளிகிலேன் - 2இவள் நிலை இதுவாக இருக்க, ஒரு ஞான லாபத்தாலே ஆறி இருக்கப்போமோ?

(9) 

                      683 

        ‘முடிவிவள் தனக்குஒன்று அறிகிலேன்’ என்னும்;
             ‘மூவுல காளியே!’ என்னும்;
        ‘கடிகமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
             ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
        ‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
             ‘வண்திரு வரங்கனே!’ என்னும்;
        அடியடை யாதாள் போல்இவள் அணுகி
             அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.

   
பொ-ரை : ‘இவள், தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்கிறாள்; ‘மூன்று உலகங்களையும் ஆளுகின்ற இந்திரனுக்கு அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்கிறாள்; ‘வாசனை வீசுகின்ற கொன்றைப் பூமாலையைச் சடையிலே தரித்தவனான சிவபெருமானுக்கு அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்கிறாள்; ‘நான்முகனான பிரமனுக்கு அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்றகிறாள்; ‘தன்னோடு ஒத்த வடிவையுடைய நித்தியசூரிகளுக்குத் தலைவனே!’ என்கிறாள்; ‘வளப்பம் பொருந்திய திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே!’ என்கிறாள்; அவன் திருவடிகளை அடையாதவளைப் போலே இருந்த இவள் முகில் வண்ணனாகிய அவன் திருவடிகளைக் கிட்டி அடைந்தாள்’ என்றவாறு.

    ஈடு : பத்தாம் பாட்டு. 3‘இனிக் கிட்டமாட்டாளோ!’ என்னும்படி துக்கத்தை அடைந்திருந்த இவள், பெரிய பெருமாள் திருவடிகளைக் கலக்கப்பெற்றாள் என்கிறாள்.

________________________________________________________________

1. ‘ஸ்த்திதோஸ்மி கதஸந்தேஹ:’ என்பது, ஸ்ரீகீதை, 18:73.

2. ‘தெளிந்திருக்க மாட்டாமைக்குக் காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இவள் நிலை’ என்று தொடங்கி.

3. ‘அடியடையாதாள்போல் இவள் அணுகி யடைந்தனன் முகில் வண்ணன்
  அடியே’ என்பதனைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.