முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இவள

இரண்டாந்திருவாய்மொழி - பா. 10

95

இவள்தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும் - பெண்பிள்ளை வார்த்தையைத் திருத்தாயார் அநுபாஷிக்கையாலே, ‘இவள் தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன்’ என்னாநின்றாள் என்கிறாள். 1‘இந்தத் துக்கக் கடலைக் கரை காணும் விரகு அறிகிலேன்’ என்னுதல் அன்றிக்கே, ‘முடிந்து பிழைக்கும் விரகு அறிகிலேன்’ என்னுதல். மூவுலகாளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவுடைவானோர் தலைவனே என்னும் - இதனை ‘மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச்சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற, வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று, 2திருமலையாண்டான் வையதிகரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர். ‘என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள். இதனை எம்பெருமானார் கேட்டருளி, ஸாமாநாதிகரண்யாத்தாலே அருளிச்செய்தருளினார்: ‘மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அநதர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்: ‘வாசனையையுடைத்தான கொன்றையைச் சடையிலேயுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்; ‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று.

    வடிவுடை வானோர் தலைவனே என்னும்-பகவானுடைய அனுபவத்தால் வந்த உவகை வடிவிலே தோற்றும்படி இருக்கிற நித்திய

_____________________________________________________________________

1. ‘முடிவு அறிகிலேன்’ என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘இந்தத் துக்கக்கடலை’ என்று தொடங்கி.

2. திருமலையாண்டான் நிர்வாஹத்திற்கு, ‘என்று சொல்லப்படுகின்ற வடிவோடு கூடிய
  வானோர்களுக்குத் தலைவனே!’ என்பாள் என்பது பொருள். ஏகாரங்கள்: எண்ணுப்
  பொருளன. ஈற்றிலேயுள்ள ‘என்னும்’ என்பது மாத்திரம் முற்று. வையதிகரண்யம் -
  வெவ்வேறான பொருள்களைக் கூறுகின்ற சொற்கள், சாமாநாதிகரணயம் -
ஒரே
  பொருளைக் கூறுகின்ற வெவ்வாறான பல சொற்கள். திருமாலையாண்டான்
  அருளிச்செய்த பொருள், அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது எம்பெருமானார்
  திருவுள்ளம். ‘என்னும், என்னும்’ என்பதற்குத் திருமாலையாண்டான் அருளிச்செய்த
  பொருளில், மகள் வார்த்தையைத் திருத்தாயார் அநுபாஷிக்கிற தன்மை தோன்றாமை
  காண்க. மேலும், இவ்விடத்தில், ஏகாரங்களை விளியாகக் கோடலே ஏற்புடைத்தாம்.
  மேலும், திருமாலையாண்டான் நிர்வாஹத்தில், லீலாவிபூதிக்கு மாத்திரம் நாதன்
  என்பது போதரும்; எம்பெருமானார் நிர்வாஹத்தில் இரண்டு உலகங்கட்கும் நாதன்
  என்பது போதரும்.