முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

684

இரண்டாந்திருவாய்மொழி - பா. 11

97

                        684 

        முகில்வண்ணன் அடியை அடைந்துஅருள் சூடி
            உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
        துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண் பொழில்சூழ்
             வண்குரு கூர்ச்சட கோபன்
        முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல் மாலை
             ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
        முகில்வண்ண வானத்து இமையவர் சூழ
             இருப்பர்பே ரின்பவெள் ளத்தே.

   
பொ - ரை: ‘முகில் வண்ணரான பெரிய பெருமாள் திருவடிகளை அடைந்து திருவருளைப்பெற்று உய்ந்தவரும், துகிலின் வண்ணத்தைப் போன்ற பரிசுத்தமான தெளிந்த தன்மையையுடைய மிகுந்த நீர் நிறைந்த தாமிரபரணித் துறைவரும், வளப்பம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த வண்மையையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபருமான நம்மாழ்வார், முகில் வண்ணன்  திருவடிகளின்மேலே அருளிச்செய்த சொல்மாலை ஆயிரத்தில் இந்தப் பத்தையும் வல்லவர்கள், முகில் போன்ற நிறத்தையுடைய பரமபதத்திலே நித்தியசூரிகள் சூழும்படி பேரின்ப வெள்ளத்தில் இருப்பர்,’ என்க.

    வி-கு:
‘துகில் வண்ணத் தூநீர் மொய்புனல் பொருநல் சேர்ப்பான்’ எனக் கூட்டுக. அன்றிக்கே, ஆற்றொழுக்காகப் பொருள் கோடலுமாம். சேர்ப்பன் - இடத்தையுடையவன்.

    ஈடு:
முடிவில், 1‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல் திருநாட்டிலே பேரின்ப வெள்ளத்தினையுடையவராய், நித்தியசூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’ என்கிறார்.

    முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் - பெரிய பெருமாள் திருவடிகளைக் கிட்டி அங்குத்தைத் திருவருளைப் பெற்றுத் தரித்தர். 2முன்னைய நிலையில் சத்தையும் அழியும்படி

________________________________________________________________

1. ‘இப்பத்தும் வல்லார் முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பவர்
  பேரின்ப வெள்ளத்தே’ என்பதனைக் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. மேல் திருப்பாசுரம் கிலேசமாக இருக்க, ‘உய்ந்தவன்’ என்று தரிப்பு
  உண்டாகச் சொல்லலாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘முன்னைய நிலையில்’ என்று தொடங்கி.