வேண்டும். என் கீழ்க்குடிகளை
யாவராலும் துயரமெய்தாமற் காத்தலே
செங்கோலன்றோ?“ என எண்ணி “என் செங்கோல் செவ்விது!“ என்று
தன்னையே இகழ்ந்தனன் என்க.
விளைந்த வாவென்று - என்பதும் பாடம்.
32
| 118.
|
மன்னுயிர்
புரந்து வையம் பொதுக்கடிந் தறத்தி
னீடும்
|
|
| |
என்னெறி
நன்றா லென்னு மென்செய்தாற் றீரு
மென்னுந்;
தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு
சோரும்;
அந்நிலை யரச னுற்ற துயரமோ ரளவிற் றன்றால். |
33 |
(இ-ள்.)
மன்னுயிர்...என்னும் - “நிலைபெற்ற உயிர்களை எல்லாம்
தீங்கு வராமற் காத்து உலகம் எல்லார்க்கும் பொதுவா மென்பதின்றி எனக்கே
உரியதென்னும்படி தரும வழியே இந்நீண்ட காலம் செலுத்திய எனது
அரசாட்சி மிக நன்றாயிருக்கின்றது!“ என்று தன்னைத்தானே இகழ்ந்து
கூறுவான்; என்...என்னும் - என்ன செய்தால்தான் இது தீர்வடையப்போகிறது!
என்று சொல்வான்; தன்...சோரும் - தனது இளங்கன்றைக் காணாத தாய்ப்
பசுவைப் பார்த்துச் சோர்வடைவான்; அந்நிலை...அன்றால் - இவ்வாறு
அந்நிலையில் அரசன் அடைந்த துன்பத்திற்கு ஓர் எல்லை இல்லை.
(வி-ரை.)
உயிர்புரந்து அறத்தில் நீடுதல் - அறத்திலே
நிலைத்து
நின்று உயிர்களைக் காத்து, அறத்தின் வழியே காவல் புரிதல். இதனாலே
“காவலன்“ என்ப. இதன் விரிவை “மாநிலம் காவலனாவான்“
என்னும்
121-வது பாட்டிற் காண்க.
பொதுக் கடிந்து
- உலகம் காத்தல் பிறருக்கும் உரியது என்று
பொதுவாதலை நீக்கித் தனக்கே உரிமையாக்கிக் கொண்டு என்க. “பொதுக்
கடிந்து இனிது காக்கும் கொற்றவன்“ என்பது திருநாட்டுச் சிறப்பு. 85-வது
பாட்டு.
என் செய்தால் தீரும்
- என்பது தீர்வில்லாமை கருதியது. சோரும்
- அதன் துயத்தை மாற்றும் வழியில்லையே என்று சோர்வடைந்தான்.
அறத்தின் நீடும் என் நெறி - முன்
மனுஅரசர் காலம் முதல்
இதுவரை நீடிவந்து அறவழியிலேயே நிலைத்து நின்றதாகிய எனது அரசு.
நீடும்
- பின்னரும் அவ்வகையே நீடும் என்பதும் தொனிக்
குறிப்பாகும்.
இப்பாட்டிற் குறித்தவை அரசன் தனக்குத் தானே சொல்லியவை.
33
வேறு
| 119. |
மந்திரிக
ளதுகண்டு மன்னவனை யடிவணங்கிச் |
|
| |
“சிந்தைதளர்ந்
தருளுவது மற்றிதற்குத் தீர்வன்றாற்
கொந்தலர்த்தார் மைந்தனைமுன் கோவதைசெய்
தார்க்குமறை
யந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்த லற“
மென்றார். |
34 |
அரசனுக்கு அமைச்சர் சொல்லியது
(இ-ள்.)
மந்திரிகள்...வணங்கி - அரசன் அடைந்த அளவில்லாத்
துயரத்தை அமைச்சர்கள் கண்டு அவன் பேரருளை நோக்கி வணங்கி;
சிந்தை ... அறம் என்றார். “அரசே! மனம் தளர்ந்து துயரமடைவது இதற்குத்
தீர்வாகாது; (பின் என்னை? என்பாராயின்) பசுவதை செய்தார்க்கு
அந்தணர்கள் விதித்த வழியே உமது மைந்தனை முறை செய்வதுதான்
அறநெறியாகும்“ என்று சொன்னார்கள்.
|